ரஷிய அதிபர் மெட்வடேவ், பிரதமர் புதின் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளன. இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடம்பர மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றை ரகசியமாக வாங்கி குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ரஷியாவில் இருந்து வெளிவரும் கொமர்சாண்ட் டெங்கி என்ற பத்திரிகையில் கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான செய்தி வருமாறு.
ரூ.3 ஆயிரம் கோடி செலவில்
ரஷிய அதிபர் மெட்வடேவும், பிரதமர் புதினும் சேர்ந்து ஊழல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் வீடுகளாகவும், மாளிகைகளாகவும் வாங்கி போட்டு உள்ளனர். புதின் கருங்கடல் அருகே 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தன் சொந்த உபயோகத்துக்காக ஒரு ஆடம்பர மாளிகையை கட்டி வருகிறார். இதற்கான பணம் முழுவதும் ஊழல், லஞ்சம், திருட்டு ஆகியவை மூலம் தான் திரட்டப்பட்டது. (இதை நிரூபிப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அந்த பத்திரிகை கூறி உள்ளது)
இதுதவிர அவர்கள் இருவருக்கும் சேர்ந்து 24 இடங்களில் ஆடம்பர மாளிகைகள் உள்ளன. அவற்றில் 6 மாளிகைகள் அதிபர் மெட்வடேவுக்கு மட்டும் சொந்தமானவை ஆகும்.
பாரீஸ் நகரில்
மாளிகைகள் தவிர, கடலோர பகுதிகளில் உள்ள உல்லாச விடுதிகளும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளன. பிரான்சு நாட்டில் பாரீஸ் நகருக்கு வெளியேயும் அவர்களுக்கு ஒரு பண்ணை வீடு உள்ளது.
இவ்வாறு அந்த பத்திரிகை கூறி உள்ளது.
இது தொடர்பாக புதினின் செய்தி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் இதை மறுத்தார். கருங்கடல் அருகே பிரதமர் ஆடம்பர மாளிகை எதையும் கட்டிவரவில்லை என்று கூறினார். ஆனால் அந்த ரஷிய பத்திரிகை கருங்கடல் அருகே கட்டப்பட்டு வரும் மாளிகையின் போட்டோவை வெளியிட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக