ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாக இந்தியா குற்றச்சாட்டு விக்கிலீக்ஸ்!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இந்தியா, பிரித்தானியாவின் அப்போதைய வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபாண்டிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

டேவிட் மில்லிபாண்ட் 2009 ஜனவரி மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது அப்போதைய இந்திய வெளிவிவகார செயலாளர் பிரணாப் முகர்ஜீ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டு வருவதாகவும், புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவது தொடர்பிலும் முகர்ஜீ கவலை வெளியிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுத்திட்டமே இலங்கைக்கு பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கப் படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என மில்லிபாண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல