ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பாகிஸ்தான் அதிபருடன் திருமணமா?

பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கும், அமெரிக்காவில் நியுயார்க்கில் டாக்டராக பணியாற்றும் தன்வீர் சமானிக்கும் துபாயில் திருமணம் நடந்ததாக வதந்திகள் வெளியாகின. இதை அதிபர் சர்தாரியின் உதவியாளர் மறுத்து இருக்கிறார். எதிர்கட்சியினர் அதிபரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கற்பனை கதைகளை எடுத்து விடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ளப்பட்டதாக கூறப்படும் தன்வீர் சமானி பற்றிய தகவல்கள் வெளியாகின. இவர்கள் திருமணத்துக்கு மதரீதியாக ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் சில இணைய தளங்கள் தகவல்களை வெளியிட்டன. இந்த நிலையில் தன்வீர் சமானி தனக்கும், சர்தாரிக்கும் திருமணமானதாக வெளியான செய்தியை மறுத்தார்.

இதுதொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பிய இ.மெயிலில், நான் சர்தாரியை இதுவரை சந்தித்ததுகூட கிடையாது. இதுபோன்ற இணைய தளங்களின் கற்பனைகளுக்கு எல்லாம் பதில் அளிப்பது என் கண்ணியத்துக்கு குறைவானது என்பதால் நான் அமைதி காத்தேன். ஆனால் தொடர்ந்து என்னை பற்றி எழுதப்படுவதால் நான் இந்த மறுப்பை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல