வெள்ளி, 30 மார்ச், 2012

தன்னுடன் மதுபானம் அருந்திய நண்பரை கொன்று சமைத்து உண்ட ரஷ்யர் கைது

ஆவணப்படம்

நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய நபரொருவர், நொறுக்குத் தின் பண்டங்கள் முடிந்ததால் தன்னுடன் மதுபானம் அருந்திய ஒருவரை கொன்று உண்ட சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.


ரஷ்யாவின் ரஸ்கி தீவைச்சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு தன்னுடன் மதுபானம் அருந்தியவரை (41 வயது) கொன்று அவரது மாமிசத்தை சமைத்து உண்டுள்ளார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்ட நண்பரது ஏனைய உடல் பகுதியை பன்றி இறைச்சி என தெரிவித்து உள்ளூர் சந்தையொன்றில் விற்றுள்ளார்.

இந்நிலையில் சந்தையில் பன்றி இறைச்சி எனக் கருதி மேற்படி நரமாமிச த்தை வாங்கிய உள்ளூர்வாசியொருவர், சமைக்கும் போது அதிலிருந்து வித்தியாச மான துர்மணம் வெளிப்படுவதை உணர்ந்தார். எனினும் அதனை வெறும் பிரமை எனக் கருதிய அவர், சமைத்த இறைச்சியை உண்டார். இதன்போது இறைச்சியின் சுவையும் மிகவும் மாறுப்பட்டதாக இருப்பதை கண்டார்.
இதனையடுத்து அவர் அந்த இறைச்சியை உள்ளூர் நிபுணர்களிடம் கொடுத்து பரிசோதிக்கவும், அது விலங்கொன்றிலிருந்து பெறப்பட்டதில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் பறந்தது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து நரமாமிசம் உண்ட குறிப்பிட்ட நபர் கைது செய்யப்ப ட்டுள்ளார்.
அவர் தான் செய்த கொடூர படுகொலையை ஒப்புக் கொண்டுள்ளார்.

“எமக்கு மதுபானத்துடன் உண்பதற்கு தின்பண்டங்கள் போதுமானதாக இருக்க வில்லை அதனால் தான் அவரை கொன்று அவரது மாமிசத்தை உண்பதற்கு தீர்மானித்தேன்'' என அவர் கூறினார்.

குறிப்பிட்ட நபரின் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மனிதத் தலையொன்று மீட்க ப்பட்டுள்ளதுடன் கொல்லப்பட்ட நபரின் என்பு எச்சங்கள் தோட்டமொன்றிலுள்ள குடிலில் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது நரமாமிசம் உண்ட நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக புலன்விசாரணை பொலிஸ் பிரிவு பேச்சாளர் அவ்ரோரா றிம்ஸ்கயா தெரி வித்தார். குறிப்பிட்ட கடையிலிருந்து மேலும் இருவர் நரமாமிசத்தை பன்றி இறைச்சி என கருதி கொள்வனவு செய்துள்ள போதும் அவர்கள் இது தொடர்பில் எதுவித முறைப்பாட்டையும் செய்யவில்லை என அவர் கூறினார்.

ரஷ்யாவில் பலரை கத்தியால் குத்தி படுகொலை செய்து அவர்களின் ஈரல் களை உண்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட த்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல