பிரபல கணிதவியலாளர் கலாநிதி அல்பிரெட் அயன்ஸ்டீனின் மூளையானது முதல் தடவையாக பிரித்தானியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அல்பிரெட் அயன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு தனது 76 ஆவது வயதில் மரணமானார்.
இந்நிலையில் அவரது மூளை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு போமல்டிஹைட் இரசாயன திரவத்தில் பேணப்பட்டது.
அவ்வாறு பேணப்பட்ட மூளையின் இரு பகுதிகளே லண்டனிலுள்ள “வெல்கம் கலக்ஷன்' காட்சியகத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேற்படி மூளையின் பகுதிகள் இதற்கு முன் கடந்த வருடம் அமெரிக்காவில் முதல் தடவையாக பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
அல்பிரெட் அயன்ஸ்டீனுக்கான பிரேத பரிசோதனையை நடத்திய தோமஸ் ஹார்வி என்பவர் மேற்படி மூளையை பாதுகாப்பாக பேணி வந்தார்.
ஆராய்ச்சிக்காக அல்பிரெட் அயன்ஸ்டீனின் மகனின் அனுமதியுடனேயே மேற்படி மூளையை பெற்றுக் கொண்டதாக தோமஸ் ஹார்வி தெரிவித்திருந்தார்.
தோமஸ் ஹார்வி அயன்ஸ்டீனின் மூளையை 240 பாகங்களாக பிரித்து போம ல்டிஹைட் இரசாயனத் திரவத்தில் இட்டு தனது வீட்டில் பேணி வந்தார்.
அவர் அம்மூளையின் 46 பகுதிகளை தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான வில்லியம் எஹ்றிச்சிடம் கையளித்திருந்தார்.
அல்பிரெட் அயன்ஸ்டீனின் மூளையுடன் கல்வியலாளரும் கொலைக் குற்றவாளியுமான எட்வார்ட் எச் றுல்லோப்பின் மூளையும் பிரித்தானியாவில் முதன்முதலாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக