திங்கள், 9 ஏப்ரல், 2012

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஆசிரியருக்கு 4,595 வருட சிறை

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசியர் ஒருவருக்கு தாய் வான் நீதிமன்றமொன்று 4,595 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தஸுங் நகரில் மேலதிக கல்வி வழங்கும் நிலையமொன்றை செயற்படுத்தி வந்த வாங் யன்-மிங் (46 வயது) என்ற ஆசிரியருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


தனது கல்வி நிலையத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பகுதியில் வீடியோ விளையாட்டுக்களை விளையாடும் மாணவிகளை இலக்கு வைத்தே அவர் மேற்படி குற்றச்செயலை புரிந்துள்ளார்.

அவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 11 வயது சிறுமியொருவர், தனது அந்தரங்க உறுப்பில் வலிப்பதாக முறைப்பாடு செய்ததையடுத்தே வாங் யன்-மிங்கின் குற்றச்செயல்கள் அம்பலத்துக்கு வந்தன.

இதனையடுத்து வாங் யன்-மிங் கைது செய்யப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல