திங்கள், 9 ஏப்ரல், 2012

மனைவியை கத்தி முனையில் 6 மணி நேரம் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த கணவன் (படங்கள் இணைப்பு)

தாய்லாந்தில் நபரொருவர் தனது மனைவியை வியாழக்கிழமை 6 மணி நேரமாக கத்தி முனையில் பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




சக்டாவுட் ஹம்சிறி (30 வயது) என்ற மேற்படி நபர், அளவுக்கதிகமாக போதைவஸ்தை உபயோகித்த நிலையில் தனது மனைவி கழுத்தில் 10 அங்குல நீளமான கத்தியை வைத்து அழுத்தியவாறு எவரையும் தன்னை நெருங்க விடாது அச்சுறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் வந்த பொலிஸார், மனைவியை விட்டு நகரும்படி சக்டாவுட் ஹம்சிறிடம் கோரினர்.


இந்நிலையில் உயர் வோல்ட் மின் சக்தியை கொண்ட “ரேஸர்' துப்பாக்கியால் சுட்டு அவரை நிலைகுலைய வைத்த பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்தனர் தற்போது போதைவஸ்தை பயன்படுத்தியமை, மனைவியை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை சக்டாவுட் ஹம்சிறி எதிர்கொண்டுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல