வியாழன், 19 ஏப்ரல், 2012

கோழிக்குஞ்சை ஈன்ற கோழி

கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஒன்றை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. வழமையாக முட்டை இடும் இந்த கோழி சில நாட்களாக முட்டையிடாமல் இருந்த நிலையில் கோழிக்குஞ்சு ஒன்றை ஈன்றுள்ளது. வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது.

குஞ்சை ஈன்றபின் அக்கோழி இறந்துவிட்டது. எனினும் அக்கோழிக்குஞ்சு நலமாக உள்ளது. இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.

‘அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது. இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது’ என அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல