அண்மையில் சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கைப் பெண், கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மூன்று மாடிக் கட்டடமொன்றிலிருந்து விழுந்து இவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த மரணம் ஒர் கொலை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்த விசாரணை நடத்திய நீர்கொழும்பு மரண விசாரனையாளர் டொக்டர் கீர்த்தி சிறிஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
பஹலகொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மினோலி தர்மசிறி என்ற பெண்ணே இவ்வாறு சவூதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கழுத்து பகுதியில் கடுமையான தாக்கப்பட்டதால் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பணியாற்றிய வீட்டின் உரிமையாளர்கள் கடுமையான சித்திரவதைகளை மேற்கொண்டதாக குறித்த பெண் தொலைபேசி மூலம் தனது கணவரிடம் பல தடவைகள் தெரிவித்துள்ளார்.
இவரை அனுப்பி வைத்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திடம் இதுபற்றி முறைப்பாடு செய்த போதிலும் பயன் கிடைக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக