வியாழன், 19 ஏப்ரல், 2012

சவுதி முட்டாள்களின் சட்டம்- அப்பாவி பெண் சிரச்சேதம் செய்யப்பட உள்ளார்!

சவூதி அரேபியாவில் 13 வயதான ஒரு சிறுமியை மாந்திரீகத்தின் மூலம் வசியம் செய்தார் என்ற சந்தேகத்தில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியாக காணப்பட்டால் இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். சவூதி அரேபியாவில் குற்றவாளியாக காணப்படும் மாந்திரீகவாதிகள் சிரச்சேதம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



இப்பெண் கைது செய்யப்பட்டமை குறித்து சவுதிஅரேபியாவில் உள்ள ஊடகங்களில் வெளியான தகவல்கள் சரியானவை என அந்நாட்டு காவல்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஜெத்தா நகரிலுள்ள சந்தை ஒன்றில் இப்பெண்ணின் அருகில் சென்றவுடன் தனது மகள் திடீரென அசாதாரணமான வகையில் நடந்துகொண்டதாக சவூதி அரேபிய பிரஜையொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அப்பெண்ணை கைது செய்யுமாறு கோரினார். அதையடுத்து, விசேட பிரிவினர் அப்பெண்ணை கைது செய்ததாக ஒகாஸ் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் தான் எந்த குற்றமும் செய்யாதவர் என்றும், தனக்கு எந்தவித மாந்திரீகமும் தெரியாது என அப்பெண் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அப்பெண் மாந்தீரிகம் செய்து குழந்தையை வசியம் செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளனர். இவருக்கு சவுதி சட்டத்தின் கீழ் சிரச்சேதம் செய்யப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Thinakkathir
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல