வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

உலகப் பழமொழிகள்...

உலகப் பழமொழிகள் -ஹங்கேரி

* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.

* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.
* ஒவ்வொருவரும் தங்களை அறிவாளி என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதனால்தான் மிகப்பலர் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
* அறிவாளி பொன்னான நாட்களையே கணக்கிடுகிறான்.
* அறிவாளி தடுக்கி விழுந்தால் பலமாகத்தான் விழுவான்.
* நரகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன, நள்ளிரவிலும்கூட.
* உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்ற விரும்புகிறான்.
* ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான். மற்ற கரங்களால் அணைக்கிறான்.
* செத்த சிங்கத்தை கழுதைகூட உதைக்கும்.
* உன் கௌரவம் உனது நாக்கில் உள்ளது.
* தாயைப் பார்த்து மகளை மணம் செய்.
* கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
* பொறாமைக்காரன் துக்கப்படுவதால் ஒன்று அவன் தொல்லைகளில் இருக்க வேண்டும், அல்லது யாரோ சிலர் அதிர்ஷ்டம் அடைந்திருக்க வேண்டும்.
* வழியைத் தவற விடுவதைவிடப் பாதி வழியில் திரும்பிவிடுவது மேல்.
* நஞ்சு விற்பவன் அழகிய விளம்பரப் பலகையைப் பெற்றிருக்கிறான்.
* மின்னலால் தாக்குண்டவன் இடியோசையைக் கேட்கமாட்டான்.

----------------------------------
உலகப் பழமொழிகள்-இத்தாலி

1.சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.

2.விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.

3.மெதுவாக பேசுகிறவன் பத்திரமாகப் பேசுகிறான். தூரமாக போகிறான்.

4.முள் குத்தும் நெருஞ்சி விரைவில் வளர்ந்துவிடுகிறது.

5.புதைக்கப்பட்டுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்படுள்ள செல்வத்திற்கும், மூடி மறைக்கப்பட்டுள்ள அறிவுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

6.எடுத்துக்கொள்பவனுக்கு உலகம் சொந்தம்.

7.உலகம் எல்லாம் ஒரே தேசம்தான்.

8.உலகம் என்பது உயர்ந்த புத்தகம். எப்படிப் படிப்பது என்று தெரியாதவனுக்கு அது சிறிதே பயன்படுகிறது.

9.அதிர்ஷ்டம் என்பது ஒரு பசுமாடு. சிலருக்கு அது தனது முகத்தைக் காட்டுகிறது.
வறுமை அழகைச் சிதைக்காது.

10.அறிவுடைமை அழிந்து போவதில்லை. அறிவாளிகள் அழிந்து போகின்றனர்.

11.மெல்லிய ஆடைகளைப் பெட்டிகளில் வைத்திருப்பவர் முரட்டுப் போர்வையை உடுத்துகின்றனர்.

12.நூற்றில் ஓர் இளைஞர்தான் சபிக்கப்பட்டவர். இருபதில் ஓர் முதியவர்தான் ஆசீர்வதிக்கப்ட்டவர்.

13.உண்மைதான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறது .

14.வேலை செய்பவனுக்கு ஒரு சட்டை. வேலை செய்யாதவனுக்கு இரு சட்டைகள்.

15.சாபங்கள் ஊர்வலங்களைப்போல எங்கே தொடங்கியதே அங்கே முடியும்.

16.கடவுள் துணை இருந்தால் சிலந்தி வலையும் ஒரு சுவராகிறது கடவுள் கருணை இல்லாவிட்டால் சுவரும் சிலந்தை வலையாகிறது.

17.குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.

18.சேவல் மௌனமாகவும் கோழி கூவும்படியாகவும் உள்ள வீடு துன்பகரமானது.

19.ஆன்மா இறைவனுக்குச் சொந்தம். உடம்பு மண்ணுக்குச் சொந்தம். சொத்து யாருக்குச் சொந்தம்?

20.ஒரு சிறிய உண்மை முழுப் பொய்யையும் நம்பச் செய்துவிடுகிறது.


21.மூடன் தன்னுடைய சொந்தச் செலவில் கற்றுக்கொள்கிறான். அறிஞன் மற்றவர்கள் செலவில் கற்கிறான்.
------------------------------------


உலகப் பழமொழிகள்- லத்தீன்


* நாம் எப்போது ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது, அதுவே மிகுந்த தாமதமாகிறது.
* அவர்களுடைய இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.. ஆனால் மிக அதிகமாக நான் காலம் இழந்ததற்கே துக்கப்படுகிறேன். எவரும் தங்கள் பணப்பையைக் காத்துக்கொள்ள முடியும் ஆனால், இழந்துபோன காலத்தை ஒருவரும் மீண்டும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது.
* மூன்று நாளைக்குப் பின் ஒரு பெண், ஒரு விருந்தினர், மழை மூவரும் களைப்படையச் செய்கின்றனர்.
* கண்ணீரால் கடினமான வைரத்தையும் உருக்கலாம்.
* எங்கே சுதந்திரம் வீழ்கிறதோ அங்கே ஒருவரும் தைரியமாகப் பேச மாட்டார்கள்.
* மரியாதைகளும் ஒரு சுமையே.
* சிங்கப் படையை ஒரு கலைமான் ஏற்று நடத்துவதைவிட கலைமான்களின் படையை சிங்கம் தலைமையேற்று நடத்திச் செல்வது மிகப் பயங்கரமானதாக இருக்கும்.
* இன்று எனக்கு; நாளை உனக்கு.
* இரவும் தனிமையும் முழுக்க சாத்தான்களுடையன.
* நமக்கு மேலே உள்ள விஷயங்களும், நமக்குக் கீழேயுள்ள விடியல்களும் நமக்கு ஒன்றும் இல்லை.
* அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பதைவிட குறைவாகத் தெரிந்துகொண்டிருப்பவர் இழப்பது மிகவும் சிறிதளவே.
* நிதானமாக ஆத்திரப்படு.
* பூமாலையில் உராய்ந்தால் பூ ஆதாரம்.
* ஆபத்து இல்லாமல் ஆபத்தை கடக்க முடியாது.
* செங்குத்தான மலைகள் முன்னாலே, ஓநாய்கள் பின்னாலே.
* ஆலாபனை இனிய பண்ணிசைப் பாடலின் நாற்றங்கால்.
* அறிவாளிகளால் உணர்வுகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகின்றன. ஆனால், முட்டாள்களால் பரிமாறப்படுகின்றன.
# வீரம் குறைந்த நெஞ்சம் ஒருபோதும் அழகிய மங்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளாது.
# அழகிய முகமும் நல்ல அதிர்ஷ்டமும் ஒரே வழியில் பயணம் போகாது.
# அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது.
# மனிதன் இடத்தை அழகுபடுத்துகிறான். இடமல்ல மனிதனை அழகுபடுத்துவது.
# உன்னுடைய அரிவாள் தீட்டப்பட்டால் உன் வேலை தாமதமாகாது.
# அதிர்ஷ்டம் நிலையில்லா மனத்தினள். அவளால் கொடுக்கப்பட்டதை திரும்பவும் வேகமாக்க் கேட்கிறாள்.
# உண்மை வெறுப்பை வளர்க்கிறது. செல்வச் செழிப்பு செருக்கை வளர்க்கிறது. பாதுகாப்பு அபாயத்தை வளர்க்கிறது.
# ஒரு மனிதனை மிகவும் அதிகமாக அதிர்ஷ்டம் சீராட்டும்போது அது அவனை முட்டாளாக்குகிறது.
# அதிர்ஷ்டம் ஒரு கண்ணாடி. அது ஒளிவீசும் தருணத்தில் உடைந்துபோகிறது.
# யார் மற்றவர்களை அச்சுறுத்துகிறாரோ, அவரே மிகவும் அச்சத்திலிருக்கிறார்.
# பயன்படுத்து, பழுது படுத்தாதே.
# சமாதானத்தின் சிங்கமாக இருப்பவர்கள் அடிக்கடி போரில் மான்.
# பூனைகள் மிகவும் நேசிக்கின்றன. ஆனால், கால்களை நனைக்க விரும்பவில்லை.
# வியர்வை இல்லாமல் இனிமை இல்லை.
# நாக்கை மடக்கிக் கொள்கிற முட்டாளும் அறிவாளிதான்.
# நீரூற்றுகள் கூடத் தாகமாக இருப்பதாக முறையிட்டுக் கொள்கின்றன.
# ஆசைப்படுவது முடியாது.

-------------------------------

உலகப் பழமொழிகள்-மியான்மர்

* துறவிகள் மெலிந்தால் அழகு
விலங்குள் கொழுத்தால் அழகு
மனிதர்கள் படித்தால் அழகு
பெண்கள் மணந்தால் அழகு
* உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும் நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.
* நாய்களின் பிரார்த்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வானம் எலும்பு மழை பொழியும்.
* பள்ளிவாசல் எவ்வளவு பெரியதாகவும் இருக்கட்டும். இமாம் அவர்க்குத் தெரிந்ததைத்தான் போதனை செய்வார்.
* பேசுகிறவனைவிடக் கேட்பவனுக்கு அதிகப் புத்தி வேண்டும்.
* மனிதன் கல்லைவிடக் கடினமானவன். ரோஜா மலரைவிட மென்மையானவன்.
* தவறான பாதையில் நீ எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் சரி, திரும்பி வா.
* மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒருவன் களைக்கும்வரை நடக்க வேண்டும்.
* மூன்று பொருட்கள் இந்த மண்ணில் விலை மதிப்பற்றதாக்க் கணக்கிடப்படுகின்றன. அவை - அறிவுடைமை, தானியம், நட்புடைமை.
* உதய சூரியனின் வெயிலில் காய்வதும், கடும் பிணத்தின் புகையை சுவாசிப்பதும், வயதான மனைவியைப் பராமரிப்பதும், தயிர் உணவை இரவில் உண்பதும் எப்போதும் வாழ்வைச் சிதைக்கும்.
* ஒரு மரத்தினுடைய நிழலில் தங்குபவன் அதனுடைய கிளைகளை உடைப்பது சரியல்ல.

----------------------------------------

உலகப் பழமொழிகள் - நைஜீரியா

* ஆயிரம் தடைவை அளவு எடு. ஒரு தடவை வெட்டு.
* இதயம்தான் ஒருவனை நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது.
* உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது.
* உழைப்புத்தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
* உயிர்கள் பல பிறவிகளை எடுப்பதற்குக் காரணம் அவை செய்த வினைகளின் பயனை அனுபவிப்பதற்கே ஆகும்.
* உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன் காதுகள் கேட்கட்டும்.
* உழைப்பு மதத்தில் பாதி.
* ஏழைகளுக்குக் கொடுப்பவன் கடவுளுக்குக்கடன் கொடுக்கிறான்.
* ஏழை தன் வயிற்றுக்கு உணவைத் தேடுகிறான். செல்வனோ தன் உணவிற்கு வயிற்றைத் தேடுகிறான்.
* ஒரு கண் எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் இரு கண்களே மேலானவை.
* கரடிக்கு ஒன்பது பாட்டுக்கள் தெரியும். எல்லாம் பேரிக்காய் பற்றி அல்லது தேனைப்பற்றி.
* குறைந்த ஆசை இன்ப வாழ்க்கை.
* சூரியன் நுழையாத இடத்தில் வைத்தியன் நுழைவான்.
* சாவின் அருகில் சென்றவனுக்கு உயிரின் மதிப்பு தெரியும்.
* தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
* கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை.
* பச்சை இலைகளே எரிந்தால் காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?
* பெண் குழந்தையை அடித்து வளர்க்காதவன் பின்னால் தனது மார்பிலே அடித்துக்கொள்ள நேரிடும்.
* மலிவாக விற்பவன் கடனக்கு விற்கமாட்டான். கடனுக்கு விற்கிறவன் மலிவாக விற்கமாட்டான்.
* மிகவும் உயரமான மரத்திற்குக்கூட அடியில் கோடரி காத்துக் கொண்டிருக்கிறது.
* ஊழல் உயர் வட்டாரங்களில் ஆரம்பமாகிறது.
* நல்ல சுகத்தோடு இருப்பவனுக்குத் தினமும் திருமணம்.
* நாற்பது பெண்களில் ஒருபெண்ணின் சொற்களைக் கவனிப்பது நல்லது.
* வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒருபரீட்சை. ஆனால் அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
* விழுகிறவனுக்கு நண்பர்கள் இல்லை. தடுக்கி விழுந்து பார்.
* வியபாரம் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு சொத்து.
* மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
* நீதிபதியிடமிருந்தும் வைத்தியனிடமிருந்தும் கடவுள் என்னைக் காப்பாற்றுவாராக!

------------------------------------


உலகப் பழமொழிகள் -ஹிப்ரூ


* சிறந்த போதகர் - இதயம், சிறந்த ஆசிரியர் - காலம், சிறந்த நூல் - உலகம், சிறந்த நண்பர் - கடவுள்.
* துன்மார்கத்தவர்களின் மகிழ்ச்சியும், நன்மார்க்கத்தவர்களின் மனத்துயரும் அறிவுக்கு எட்டாதவைகளாக உள்ளன.
* பஞ்சம் ஏழாண்டுகள் நீடித்திருக்கிறது. ஆனால், அது வேலை செய்பவருடைய கதவு வழியாக்க் கடந்து செல்கிறது.
* அறிவுள்ள மனிதனின் அறிவுரையைக் கேட்பதாக இருந்தால் அவருடைய அறிவில் பாதி நீ பெற்றிருக்க வேண்டும்.
* நல்லதும், தீயதும் அறிந்தவர் ‘அறிஞர்’ என்று அழைக்கப்படுபவர் அல்லர். ஆனால், இரண்டு தீயவைகளில் குறைவான தீயதை அறியக்கூடிவரே அறிஞர்.
* அறிவு தலைக்கு கிரீடம். அடக்கம் காலுக்குச்செருப்பு.
* ஏழைகளுக்குத் திறக்காத கதவு வைத்தியனுக்குத் திறக்கும்.
* சத்தியம் கடவுளுடைய முத்திரை.
* இவ்வுலகில் கடமை என்ற பாதையே மறு உலகில் சொர்க்கத்தின் பாதை.
* மனிதனுடைய எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இரத்தம்.
* ஆசை கண்ணைக் குருடாக்குகிறது. காதைச் செவிடாக்குகிறது.
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன். அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை.
* சொற்களை எடை போட வேண்டும் எண்ணக்கூடாது.
* கடலைப் பிரித்தால் சிற்றோடைகளாகிவிடும்.
-----------------------------------


உலகப் பழமொழிகள் -ஸ்பெயின்


* மரியாதையின் மலிவான பொருள் வேறில்லை.
* இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திற்க்கிறார்கள்.
* இறைவன் ஏழையை நேசிக்கலாம். ஆனால், அழுக்கடைந்தவனை அல்ல.
* நண்பன் கேட்கும்போது ‘நாளை’ என்ற சொல் இல்லை.
* அகந்தை அல்லது பலவீனத்தால் ‘இல்லை’ என்று சொல்லாதே!
* வழக்கறிஞரின் பிரியம் சிறிதளவு செல்வம்
மருத்துவரின் பிரியம் சிறிதளவு உடல்நலம்
சன்னியாசியின் பிரியம் சிறிதளவு மரியாதை
------------------------------

உலகப் பழமொழிகள் -சயாம்


* வானத்தை நோக்கி ஒருவன் துப்பினால் அது அவன் முகத்திலேயே விழும்.
* தெளிவானதொரு குறிகோளை நோக்கி முயற்சி செய்.
* தாமரை இலை நீர்போல் பெண் மணம் நிலையற்றது.
* சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் தங்க ஆப்பிள் மாதிரி.
* ஆசிரியர்களை அவர்கள்முன்னிலையில் புகழ்ந்து பேசு. கீழ் அதிகாரகளை அவர்களுடைய வேலையைச்செய்து முடித்தபிறகு புகழந்து பேசு. நண்பர்களை அவர்கள் இல்லாதபோது புகழ்ந்து பேசு.

உலகப் பழமொழிகள் -போஸ்னியா


* இரு பொருட்கள் உலகை ஆளுகின்றன. அவை ரட்சிப்பும், சிட்சிப்பும்.

உலகப் பழமொழிகள் -யுக்ரேனியா


* கூன்னின் முதுகு கல்லறையில்தான் நிமிர்த்தப்படும்.
* குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது கை நோகிறது. அதைக் கீழே விட்டால் மனம் நோகிறது.

உலகப் பழமொழிகள் -வேல்ஸ்


* நீ ஒரு பாம்பைக் கொல்வதனால் அதனுடை வாயைக்கூட அழித்துவிடு.
* எது அடிக்கடி பார்க்கப்படவில்லையோ அது ஒதுக்கப்பட்டது.

உலகப் பழமொழிகள் -பின்லாந்து


* முள்ளின் மேலே பிறந்தவன் முள்ளின் மேலேயே சாவைத் தேர்ந்தெடுப்பான்.
* நல்ல மணியின் ஓசை தூரத்திலும் கேட்கும். கெட்ட மணியின் ஓசை அதைவிட அதிக தூரத்தில் கேட்கும்.


உலகப் பழமொழிகள் -டச்சு


* துளை அளவிற்கு ஆணியும் துயர் அடைகிறது.
* கப்பல் முழுவதையும் இழப்பதைவிட நங்கூரத்தை இழப்பது மேல்.
* இரவும் இருளும் எண்ணங்களின் அன்னையர்.
* நீண்ட நேரமாக உண்பது, சுருக்கமாக வழிபாடு செய்வதை போலவே மிகவும் விரும்பப்படுகிறது.
* உண்மை கடவுளின் முத்திரை.
* சேதம் ஏதும இல்லாமல் எல்லா ஆதாயங்களுடன் உண்மை தோற்றமளிக்கிறது.
* எண்ணெய் ஆரம்பத்தில் சிறந்தது. தேன் முடிவில் சிறந்தது. மது நடுவில் சிறந்தது.
* வாலின் அறிவுரையை ஏற்றுக்கொண்டால் தலை தன் தலையை இழக்கிறது.
* தங்கத்தில் நட்டத்தைவிட தவிட்டில் வரும் ஆதாயம் மேல்.
* தூப கலசத்திலிருந்து வரும் புகையும் வாசனையும் பிரிக்க இயலாதவை.
* பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கிறது.
* சமாதான காலத்தில் போர் சிப்பாய்கள் வெயில் காலத்தில் தீப்போல.
* மிகப்பெரும் அதிர்ஷ்டம் ஒரு நல்ல கணவன். அதற்கடுத்து நன்றியுள்ள வேலைக்காரன்.

உலகப் பழமொழிகள் -பிலிப்பைன்ஸ்


* ஆத்மாவின் நோய்களே பாவங்கள்.
* அழுக்குப் பிடித்த கைகளை உடையவளை நம்பி நூல் சிக்கலை அவிழ்க்க கொடுக்காதே!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல