1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடைகள்:
1. சைக்கிள், 2. பட்டாசு, 3. தராசு, 4. எறும்புக் கூட்டம், 5. அஞ்சல் பெட்டி.-
----------------------
01. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்?
02. பிறக்கும்போது வால் உண்டு; இறக்கும்போது வால் இல்லை. அது என்ன?
03. வெளுத்த ஆளுக்கு கருப்புத் தலைப்பாகை. அது என்ன?
04. தரையில் இருப்பான். தண்ணீரில் மிதப்பான். அது என்ன?
05. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
06. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன?
07. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?
08. தாயின் வாயில் பிறக்கும்; தரணி எங்கும் சிறக்கும். அது என்ன?
09. தண்ணீர் இல்லாத காட்டில் தாகம் எடுத்தாலும் தயங்காமல் போகும். அது என்ன?
10. பார்த்தால் பசப்புக்காரி. கடித்தால் கசப்புக்காரி. அவள் யார்?
11. காற்றுப் புகாத வெள்ளைக்கூண்டில் மஞ்சள்புறா மயங்கிக் கிடக்குது. அது என்ன?
12. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன?
13. மூளை உண்டு; ஆனால் சிந்தனை இல்லை. கால் உண்டு; ஆனாலும் நடப்பதில்லை. அது என்ன?
14. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
15. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன?
விடைகள்
1. நாக்கு
2. தவளை
3. தீக்குச்சி
4. படகு
5. சூரியன்
6. தலைமுடி
7. கடிகாரம்
8. தாலாட்டு
9. ஒட்டகம்
10. பாகற்காய்
11. முட்டை
12. இதயம்
13. பிறந்த குழந்தை
14. வேர்க்கடலை
---------------------------------------------------------
1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?
2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?
3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?
7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?
9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?
10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?
1. வாழைப்பூ
2. பேனா
3. நாவல் பழம்
4. தேங்காய்
5. காய்ந்த மிளகாய்
6. நீர்க்குமிழி
7. விரல்கள்
8. பம்பரம்
9. கிளி
10. பூனை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக