வெள்ளி, 7 செப்டம்பர், 2012

அபூர்வ மனிதன்!

மெல்வின், 1920 ஆம் ஆண்டில் மிஸூரி (Missouri) யில் பிறந்தவர். குடும்பத்தில் 6 நபர்கள் இருந்த போதும் இவருக்கு மட்டும் இவர்களின் ஏதோ ஒரு தாத்தாவிடம் இருந்த மரபணுக்கோளாறு கூடவே பிறந்துவிட்டது.



ஆரம்பம் முதல் பல மருத்துவர்களிடம் அலைந்து சென்றும் இந் நோய் என்ன என்பதையும் அதற்கு தீர்வையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிற்காலத்தில் neurofibromatosis என்று அந்த மரபணு மாற்ற நோய் அடையாலங்காணப்பட்டது. இவரில் இந்நோய் தாடைப்பகுதியில் உருவாகியுள்ளது. (இவ் நோயுடன் பலர் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. )

இவரின் தோற்றத்தால் பாடசாலைக்கல்வியை ஒழுங்காக கற்க முடியாது போனதால், இவரிடையே இருந்த விசேட கணிதத்திறன் வீணடிக்கப்பட்டது.

1949 ஆம் ஆண்டு தனது தோற்றத்தைக்கொண்டே உழைக்க முடிவெடுத்த அவர் சேர்க்கஸ் கொம்பனியை ஆரம்பித்தார். அதே ஆண்டில் அவரின் நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்! அவரின் தோற்றத்தை பலர் கிண்டல் செய்த போதும் அவரின் மனைவியின் அன்பான அரவணைப்பில் சந்தோசமான் வாழ்க்கையை நடத்தினார் என கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல