வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பின்னழகை 'ஒரிஜினல்' என்று நிரூபித்த அமெரிக்க பாடகரின் மனைவி! (படங்கள், காணொளி இணைப்பு)

அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி-யின் மனைவி கோகோ ஆஸ்டின் தனது பின்னழகு 100 சதவீதம் ஒரிஜினல், எந்தவிதமான ஆபரேஷனும் தான் செய்யவில்லை என்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து, அதை லைவாக டிவியிலும் காட்டி நிரூபித்து அத்தனை பேரின் பார்வையையும் அதிலிருந்து அகலச் செய்துள்ளார்.

எப்படி நமக்கெல்லாம் 'விக்கோ' என்றால் பல்லழகு நினைவுக்கு வருமோ, அது போல கோகோ என்றாலே அவரது பின்னழகுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அப்படி ஒரு பிரமாண்ட அழகுடன் கூடியவர் கோகோ. இவர் அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டியின் மனைவி ஆவார். ஆனால் கோகோவுக்கு இருப்பது ஒரிஜினல் கிடையாது, ஆபரேஷன் செய்து விட்டார். அதனால்தான் பெரிதாக இருக்கிறது என்று பல பொறாமைக்காரர்கள் அவருக்குப் பின்னால் இருந்து புலம்பிக் கொண்டிருந்தனர்.

பார்த்தார் கோகோ. இதற்கு முடிவு கட்ட ஒரு சூப்பர் ஐடியா வந்தது அவருக்கு. அமெரிக்க டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல லைவ் ஷோவான தி டாக்டர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகி தனது யோசனையை தெரிவித்தார். அவர்களும் சூப்பரப்பு என்று பாராட்டி உடனே ஒத்துக் கொண்டனர்.

அதாவது ஐடியா என்னன்னா.. கோகோவின் பின்புறத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பது, அதில் அவருக்கு இருப்பது நிஜமான, இயற்கையான பின்னழகுதான் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பது, இதை நேரடியாக ஒளிபரப்புச் செய்வது என்பது.

பிறகென்ன தி டாக்டர்ஸ் நிகழ்ச்சிக்குப் போனார் கோகோ. அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.டாக்டர் ஆண்ட்ரூ ஆர்டன் ஸ்கேன் செய்தார். இது நேரடியாகவும் ஒளிபரப்பானது. இறுதியில், கோகோவுக்கு இருப்பது உண்மையான பின்புறம்தான், செயற்கையானதல்ல என்பதை ஆதாரப்பூர்வமாக, படம் போட்டுக் காட்டி விளக்கினார் டாக்டர் ஆண்ட்ரூ.

ஸ்கேன் செய்தபோது ஒருவரது பின்னழகு எப்படி இருக்கும் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல விளக்கிக் கொண்டே பேசினார் டாக்டர் ஆண்ட்ரூ. அதை ஸ்கேனிங் டேபிளில் படுத்தபடி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் கோகோ... 'ஒரிஜினல் புன்னகையோடு'.

இறுதியில் அனைவருக்கும் ஒரு சந்தோஷச் செய்தி. கோகாவுக்கு இருப்பது 100 சதவீதம் ஒரிஜினல் பின்புறம்தான் என்று டாக்டர் ஆண்ட்ரூ கூறியபோது கோகோ முகத்தில் புன்னகை பெருக்கெடுத்து ஓடியது.

ஆனாலும் விடவில்லை பின்னாலிருந்து பேசுபவர்கள். அதெல்லாம் சும்மாங்க, கோகோ 'மாட்டியிருப்பது' பிரேசில் நாட்டு செயற்கை பின்னழகு. அது ஸ்கேனில் தெரியாது... என்று புது பிட்டைப் போட்டு விட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல