ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

அன்று ஆசாமியைப் பாடிய வாயால் இன்று சாமியைப் பாடும் சாந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர்களாக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் சாந்தன்.

இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற புதுவையின் பாடல் வரிகளுக்கு கம்பீரமான குரலால் உயிர் கொடுத்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு சாந்தன், சுகுமார் போன்றவர்களின் குரல் வளம் பலம் சேர்த்தது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுக்கமான தடைகளையும் மீறி சாந்தன், சுகுமார் போன்றவர்கள் வன்னியில் இருந்து வடமராட்சி நோக்கிப் படகில் புறப்பட்டனர்.

ஆனால் அரச படையினரால் இவர்கள் இடைமறித்துப் பிடிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சாந்தன் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற இடங்களில் சுதந்திரமாக இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

பக்திப் பாடல்களை இவர் மேடைகளில் முழக்கம் இட்டு வருகின்றார்.







Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல