ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வாத்தை கற்பழித்த துருக்கியர்

வாத்து ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் 50 வயது நபர் ஒருவர் துருக்கியில் பொலிஸாரால் மறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இவரது மனைவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் கைது இடம்பெற்று உள்ளது.

மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு இவர் வந்து தங்கிய ஒரு இரவில் இக்குற்றச் செயல் நடந்து உள்ளது என்றும் மனைவியின் பெற்றோரால் வளர்க்கப்படுகின்ற வாத்துக்களில் ஒன்றை கற்பழித்து இருக்கின்றார் என்றும் முறைப்பாட்டில் முக்கியமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இறக்கைகள் பிடுங்கப்பட்டு, உடலில் இரத்தம் ஒழுகிய நிலையில் வாத்து கட்டில் ஒன்றில் காணப்பட்டது என்றும் வாத்தால் நடக்க முடியவில்லை என்றும் நபருடைய மனைவியின் தகப்பன் தெரிவித்து உள்ளார்.

நபரின் மேலாடை மரம் ஒன்றில் போடப்பட்டு இருந்தமையை மறுநாள் கண்டார் என்றும் இதில் இரத்தம் காய்ந்து காணப்பட்டது என்றும் நபருடைய மனைவியின் தாய் தெரிவித்து உள்ளார்.

ஆனால் குற்றச்சாட்டை நபர் முற்றாக நிராகரித்து உள்ளார்.

வாத்தின் குடல் தொகுதிக்கு பாரிய பாதிப்பும், சேதமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் வைத்தியர்களால் பல தடவைகள் வாத்துக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

வாத்து தேறி வருகின்றது என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல