வியாழன், 11 அக்டோபர், 2012

ஓரெளுத்துக்களும் அவற்றிற்கான விளக்கமும்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ ----- எட்டு

ஆ ----- பசு

ஈ ----- கொடு, பறக்கும் பூச்சி

உ ----- சிவன்

ஊ ----- தசை, இறைச்சி

ஏ ----- அம்பு

ஐ ----- ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ ----- வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா ----- சோலை, காத்தல்

கூ ----- பூமி, கூவுதல்

கை ----- கரம், உறுப்பு

கோ ----- அரசன், தலைவன், இறைவன்

சா ----- இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ ----- இகழ்ச்சி, திருமகள்

சே ----- எருது, அழிஞ்சில் மரம்

சோ ----- மதில்

தா ----- கொடு, கேட்பது

தீ ----- நெருப்பு

து ----- கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ ----- வெண்மை, தூய்மை

தே ----- நாயகன், தெய்வம்

தை ----- மாதம்

நா ----- நாக்கு

நீ ----- நின்னை

நே ----- அன்பு, நேயம்

நை ----- வருந்து, நைதல்

நொ ----- நொண்டி, துன்பம்

நோ ----- நோவு, வருத்தம்

நௌ ----- மரக்கலம்

பா ----- பாட்டு, நிழல், அழகு

பூ ----- மலர்

பே ----- மேகம், நுரை, அழகு

பை ----- பாம்புப் படம், பசுமை, உறை

போ ----- செல்

மா ----- மாமரம், பெரிய, விலங்கு

மீ ----- ஆகாயம், மேலே, உயரம்

மு ----- மூப்பு

மூ ----- மூன்று

மே ----- மேன்மை, மேல்

மை ----- அஞ்சனம், கண்மை, இருள்

மோ ----- முகர்தல், மோதல்

யா ----- அகலம், மரம்

வா ----- அழைத்தல்

வீ ----- பறவை, பூ, அழகு

வை ----- வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ ----- கௌவுதல், கொள்ளை அடித்தல்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல