சனி, 20 அக்டோபர், 2012

’நான்தான் நீக்கினேன்’ :- மதுரை ஆதீனம்! ’நானேதான் விலகிக் கொண்டேன்’:- நித்தி!

”ஆதீனத்தை சிவபெருமான் காப்பாற்றி விட்டார். என் மனக் கவலை தீர்ந்தது. நிம்மதியாக பூஜை செய்தேன். அடுத்து நடப்பதை சிவபெருமான் பார்த்துக் கொள்வார்.”‘என்கிறார் மதுரை ஆதீனம்

நேற்று மதுரை ஆதீனத்தின் ஜுனியராக இருந்த நித்தியானந்தாவை அப்பொறுப்பில் நீக்கியதுடன் மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்களை மடத்தை விட்டு நேற்று இரவு வெளியேற்றினார் அருணகிரியார். இதைத் தொடர்ந்து, தனது தொண்டர்களை பணியில் அமர்த்தினார். இன்று நித்யானந்தா மதுரைக்கு வருவதாக இருந்தது. அவரை டிஸ்மிஸ் செய்து போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பயந்த நிலையில் நித்யானந்தா வரவில்லை.

இதற்கிடையில் இன்று ஆதீனம் சிவ பூஜை நடத்தினார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஞானபால் வழங்கினார்.பின்னர் காத்திருந்த நிருபர்களிடம் அருணகிரிநாதர் அளித்த பேட்டி இதுதான்:

ஆதீனத்தை சிவபெருமான் காப்பாற்றி விட்டார். என் மனக் கவலை தீர்ந்தது. நிம்மதியாக பூஜை செய்தேன். அடுத்து நடப்பதை சிவபெருமான் பார்த்துக் கொள்வார்.

திருவண்ணாமலையில் நித்யானந்தா அளித்துள்ள பேட்டியில் “நீக்கியதற்காக அதிர்ச்சி அடையவில்லை, நல்ல நாள் பார்த்து நானே ராஜினாமா செய்வதாக இருந்தேன், அதற்குள் ஏன் நீக்கினார் என தெரியவில்லை?’’ என்று கூறி உள்ளாரே?

ராஜினாமா செய்ய உத்தரவிட்டபோது ஒப்புக் கொண்டார். பிறகு மறுத்து விட்டார். நல்ல காரியங்களுக்கு தான் நல்ல நாள், நல்ல நேரம், நட்சத்திரம் பார்க்க வேண்டும். ராஜினாமாவுக்கு நல்ல நாள், நல்ல நேரம் எதற்கு? தேவையில்லையே. ராஜினாமா செய்து இருந்தால் நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது.

நீக்கும் அளவுக்கு என்ன நெருக்கடி என நீங்கள் கூற வேண்டும் என்கிறாரே?

1,500 ஆண்டு கால பாரம்பரிய ஆதீனமடத்திற்கு சோதனையே நித்யானந்தா தானே. அதனால் தான் நீக்கினேன். முக்கியமாக ஆதீன பெருமை அழியாமல் நிலை நாட்டும் நோக்குடன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாய்ப்பு கிடைத்தால் உங்களை சந்திப்பேன் என்று நித்யானந்தா கூறி உள்ளாரே?

நீக்கிய பிறகு அவருக்கும் ஆதீனத்திற்கும் எந்த தொடர்பு கிடையாது. எனவே சந்திக்க என்ன இருக்கிறது. இங்கு வரமாட்டார். அதற்கு தேவையும் இல்லை.

வாரிசாக நியமிக்கப்பட்டபோது ஆதீனத்திற்கு ரூ.5 கோடி கொடுப்பதாக நித்யானந்தா சொன்னாரே?

ஆதீன வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கொடுக்க போவதாகவும், முதலில் ரூ.5 கோடி கொடுப்பதாகவும் சொன்னார். ஒரு பைசா கூட என்னிடம் கொடுக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் முழுப் பொய். ””என்றார் ஆதீனம்.

முன்னதாக திருவண்ணாமலை ஆசிரமத்தில் நிருபர்களுக்கு நித்யானந்தா அளித்த பேட்டியில் : மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கியதும், போலீசில் புகார் செய்திருப்பதும் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. அதனால் எனக்கு அதிர்ச்சியில்லை. நானே ராஜினாமா செய்கிறேன் என ஆதீனத்திடம் வாக்குறுதி அளித்திருந்தேன். நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்யலாம் என காத்திருந்தேன். அதற்குள் அவரே என்னை நீக்கி விட்டார். அதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. என்னாலும், என் சீடர்களாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாது. அவரை என்னுடைய தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன்.

அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன். என்னை நீக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடி என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.அருணகிரிநாதர் கொடுத்துள்ள புகார் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று கேட்கிறீர்கள். அப்படி எதுவும் நடக்காது, இளைய ஆதீனமாக இருந்த காலத்தில் ஏதேனும் உங்களுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டதா?என்று கேட்டால், நான் சிறு சிறு சேவைகளை செய்தேன். உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க முடியுமா? மதுரை ஆதீனத்தில் உள்ள என்னுடைய பொருட்கள் எதையும் திரும்ப எடுத்துவர மாட்டேன். என் சீடர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. அவர்களாகவே திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்”

”என்று அவர் தெரிவித்திருந்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல