மறைந்த புலித்தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட மெய்ப் பாதுகாவலராக இருந்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நடராசா பூவரசு என்பவர் மீதான புலனாய்வு விசாரணைகள் முடிவடையவில்லை, இவருக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் அறிவுறுத்தல்களைப் பெற வேண்டி உள்ளது என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் பணிப்பாளர் சரத் வட்டேவல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை அடுத்து விளக்கமறியலில் நீடிப்பு உத்தரவை மேலதிக நீதிவான் குசல செனதீர பிறப்பித்தார்.
சந்தேகநபர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டார் என்றும் 1991 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் என்றும் ஏராளமான புலிச் சமர்களில் பங்கேற்று இருக்கின்றார் என்றும் பணிப்பாளர் மன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
பூவரசு 1994 ஆம் ஆண்டு பிரபாகரனின் தனிப்பட்ட மெய்ப் பாதுவலராக நியமனம் பெற்றார். பிரபாகரன் கொல்லப்படுகின்றமைக்கு சில நாட்கள் முன்புதான் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அது வரை மெய்ப் பாதுகாவலர் பதவியிலேயே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக