தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டாளுமன்ற உறுப்பினராக இருந்த என். கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைக்க சொல்லி உத்தரவிடப்பட்டார் என்று சொல்லி கனடாவில் புரளியை கிளப்பி உள்ளார் படை விட்டோடி ஒருவர்.
இவரின் பெயர் ரவீந்திர வதுடுற பண்டானகே. இராணுவத்தில் கப்டனாக இருந்தவர். வயது 38. இராணுவத்தில் இருந்து ஓடி 2008 ஆம் ஆண்டு ரோரன்ரோவுக்கு வந்தார்.
கேணல் ஒருவரால் பிறப்பிக்கப்பட்டு இருந்த மேற்படி உத்தரவை மீறிய நிலையில் கொழும்புக்கு இட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் இதனால் படையை விட்டு ஓடினார் என்றும் அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கான விசாரணையின்போது குடிவரவு அதிகாரிக்கு இப்படை விட்டோடி தெரிவித்து உள்ளார்.
சிறுபான்மைத் தமிழர்கள் மீது அரச படையினரால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்செயல்கள், சித்திரவதைகள், கற்பழிப்புக்கள் ஆகியவற்றை மிக நன்றாக அறிவார் என்றும் கூறி இருக்கின்றார்.
இவரது சொந்த இடம் காலி. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் காலியைச் சேர்ந்தவர். எனவே பொன்சேகாவின் விசுவாசிகளில் ஒருவராக ரவீந்திர இருக்கக் கூடும் என்றும் அரசுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ள இவரைப் போன்று இன்னும் பலர் ஏவி விடப்பட்டு இருக்கலாம் என்றும் கனேடிய புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார். அதே நேரம் இவரது வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை அறிந்து சொல்ல வேண்டுமென கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக