புதன், 19 டிசம்பர், 2012

இலங்கையிலும் மஞ்சள் மழை! தொடரும் சிவப்பு மழை! விண்கல் மழைக்கு 200 நாய்கள் பலி!!

தமிழகத்தின் விருத்தாசலம் அருகே மஞ்சள் மழை பெய்ததைப் போல இலங்கையிலும் மஞ்சள் மழை பெய்திருக்கிறது. மேலும் சில இடங்களில் சிவப்பு மழையும் கொட்டியிருக்கிறது.

இலங்கையில் கடந்த ஒரு வாரகாலமாக பல இடங்களில் சிவப்பு மழை கொட்டியிருந்தது. இந்நிலையில் வான்பரப்பில் மர்ம பொருட்கள் பறப்பதாகக் கூறப்பட்ட நிலையில் பொலன்னறுவை என்ற இடத்தில் விண்கற்கள் விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் விருத்தாசலம் அருகே மஞ்சள் மழை சில நிமிடங்கள் பொழிந்ததாக தகவல் பரவியது. இதேபோல் இலங்கையின் களுத்தறை, வலல்லாவிட இத்தபான மிரிஸ்வத்த பகுதியில் நேற்று இரவு மஞ்சள் நிற மழை பெய்திருக்கிறது. இந்த மஞ்சள் நிற மழை நீர் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.

இதேபோல் இலங்கையின் மாத்தறையில் மீன்மழை நேற்று பகலில் பெய்திருந்தது. புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்திருக்கிறது. மேலும் சில இடங்களில் சிவப்பு மழை பெய்திருக்கிறது.

விண்கல் மழையில் 200 நாய்கள் பலி

இதனிடையே பொலனறுவை பகுதியில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென உயிரிழந்தன. இதற்கு சிவப்பு மழைதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது.

இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொலனறுவை மாவட்ட ஆட்சியர் நிமல் அபேசிறி, அண்மையில் பெய்ததாகக் கூறப்படும் விண்கல் மழையால்தான் இந்த நாய்கள் பலியாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல