புதன், 19 டிசம்பர், 2012

பிரபாகரனை காப்பாற்ற சிறப்பு விமானம் அனுப்பிய அமெரிக்கா!

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை காப்பாற்றுகின்ற முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா சிறப்பு விமானம் ஒன்றை கொழும்புக்கு அனுப்பி இருந்தது என தற்போது தகவல்கள் வெளியில் கசிந்து உள்ளன.

இலங்கை அரசுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்ட போதும் வெளிவட்டாரங்களுக்கு இவ்விடயம் மிக இரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்து உள்ளது.

அப்போது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்தவர் ரோஹித போகொல்லாகம. விமானம் வந்து இறங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் ரோஹித போகொல்லாகமவுக்கு அறிவிக்கப்பட்டது

விமானத்தில் அமெரிக்கப் படை அதிகாரிகளின் நிபுணர் குழு ஒன்று வந்து இருந்தது. இவர்கள் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள். புலித் தலைவர்களையும், இத்தலைவர்களின் குடும்ப அங்கத்தினரையும் விமானத்தில் பாதுகாப்பாக வெளியேற்றுகின்றமை குறித்து குழுவினரால் கள நிலைமைகள் ஆராயப்பட்டன.

இலங்கை அரச உயர்மட்டக் குழுவினருடன் இவர்கள் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல