சனி, 22 டிசம்பர், 2012

அடிப்பது, கடிப்பது, கிள்ளுவது, மிஸ் முகத்தில் குத்துவது...5 வயது மாணவன் டிஸ்மிஸ்! (படங்கள் இணைப்பு)

லண்டனைச் சேர்ந்த 5 வயது சிறுவனால் ஒரு பள்ளிக்கூடமே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இவன் அடிக்கடி தனது வகுப்பு ஆசிரியை முகத்தில் குத்தி விடுகிறானாம். இதற்காக இந்த வருடத்தில் மட்டும் இவனை 4 முறை சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். தற்போது இவனை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்து விட்டனர். ஆனால் இவன் ரொம்ப சமத்துப் பையன் என்று இவனது பெற்றோர்கள் சண்டைக்கு வருகிறார்களாம்.

பார்க்க அமுல் பேபி போலத்தான் இருக்கிறான் லோகன் ஸ்டீட். வயது 5 ஆகிறது. இந்தப் பிள்ளையா இப்படிச் செஞ்சுச்சு என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது அவனைப் பார்த்தால், அப்படி ஒரு அப்பாவி முகம். ஆனால் இவன் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இவன் படு டெர்ரராக வலம் வருகிறான் என்று பள்ளியில் புலம்புகிறார்கள். அடிக்கடி சேட்டை செய்தும், அடித்தும் வம்பிழுத்து அனைவரையும் டென்ஷன் ஆக்கி விடுகிறானாம் ஸ்டீட். இதனால் இதுவரை நான்கு முறை இவனை சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.

தற்போது நிரந்தரமாக பள்ளியை விட்டு நீக்கி விட்டனர். சக மாணவர்களை கடிப்பது, அடிப்பது, முகத்தில் குத்துவது, கிள்ளுவது போன்றவை இவனது தாக்குதல் வகைகள். அதிகபட்சமாக மிஸ் முகத்திலேயே இவன் ஒரு முறை குத்து விட்டு கதிகலக்கி விட்டானாம். பள்ளிக்கூடப் பொருட்களை தூக்கி கடாசுவது, கையில் கிடைப்பதை உடைப்பது என்று பெரும் ரகளைப் பார்ட்டியாக இருந்துள்ளான் ஸ்டீட்.

ஒருமுறை இவன் செய்த சேட்டையால் பள்ளியே பதறிப் போய் விட்டதாம். இவனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனராம். அந்த அளவுக்கு வகுப்பையே துவம்சம் செய்து விட்டானாம்.

இப்படி வம்பு வளர்த்துக் கொண்டே வந்த அவன் சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியை முகத்தில் ஒரு குத்து குத்தி விட்டான். அவன் அருகே வந்த ஆசிரியை குணிந்து நின்றுள்ளார். அதன் சமயம் என்று முகத்தில் குத்தி விட்டான் ஸ்டீட். இதன் பிறகே இவனை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யும் முடிவுக்கு பள்ளி நிர்வாகம் வந்ததாம்.

ஆனால் ஸ்டீடின் பெற்றோர் அத்தனை புகார்களையும் அப்படியே மறுக்கிறார்கள். அதெப்படி ஸ்டீடை முரட்டுப்பையன் என்று கூற முடியும். அவன் சமர்த்துப் பையன். யாருடனும் சண்டை போட மாட்டான். அமைதியானவன், புத்திசாலியானவன் என்று சண்டைக்கு வருகிறார்கள்.

ஸ்டீடின் தந்தை காமரூன் கூறுகையில், ஒரு ஐந்து வயதுப் பையனால் பள்ளிக்கே ஆபத்து என்று கூறுவதை என்னால் ஏற்கவே முடியாது. இதை நம்பவே முடியவில்லை என்றார் காமரூன்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல