டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் ரத்த அணுக்கள் மேலும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 5 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரின் குடல் பகுதி பெரும் சேதமடைந்த நிலையில் அறுவை சிகி்ச்சை செய்து குடலில் 15 இன்ச் அளவுக்கு வெட்டி எடுத்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் அவரது உடல் நிலை குறித்து சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர் கூறுகையில்,
அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரது ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைவாக இருந்தது. தற்போது அது மேலும் குறைந்துள்ளது. அவரது ஈரலில் தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பது கவலை அளிக்கிறது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் நேற்று எழுதிக் காண்பித்தார் என்றார்.
இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக