சனி, 22 டிசம்பர், 2012

சிறுவன் சேகரித்த முட்டையில் வெளிவந்த பாம்பு குட்டிகள்

ஆஸ்திரேலியாவில், சிறுவன் சேகரித்து வைத்திருந்த முட்டையிலிருந்து பாம்பு குட்டிகள் வெளிவந்தன.ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணம், டவுன்ஸ்வில்லி பகுதியை சேர்ந்தவர் டோனா சிம். இவரது மகன் கிலே குமிங், 3.தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிலே, அங்கு சிதறிக் கிடந்த முட்டைகளை, விளையாட்டாக பொறுக்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பொறுக்கி வைத்த, 12 முட்டைகளை, வீட்டுக்கு எடுத்து வந்து, தன் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்திருந்தான்.

இவனது தாய் டோனா, சமையல் செய்வதற்காக, இவனது அறையில் இருந்த பாத்திரத்தை எடுத்துச் சென்று திறந்த போது, ஒன்பது விஷப் பாம்பு குட்டிகள் நெளிவதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக அந்த பாத்திரத்தை மூடி வைத்து விட்டார்.வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, ஒன்பது பாம்பு குட்டிகளை எடுத்துச் சென்று, காட்டில் விட்டனர்."இந்த பாத்திரத்தை சிறுவன் திறந்து விளையாடி இருந்தால், கொடிய பாம்பு குட்டிகளால் கடிபட்டு இறந்திருப்பான், என, வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல