திங்கள், 3 டிசம்பர், 2012

மகிந்தவுடன் இணைந்து செயற்பட ரெலோ முடிவு- சிவாஜிலிங்கம் அறிவிப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் தாம் நேரடியாக பேசப்போவதாகவும் ரெலோ அமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ரெலோவின் பொதுச் சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேராமல் தாம் தனியாக மகிந்த ராசபக்ச அரசுடன் பேசப்போவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ரெலோ இயக்கம் எதிர்வரும் ஜனவரி 27ஆம் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கட்சி மகாநாடு ஒன்றை நடத்த உள்ளதாகவும், அக்கூட்டத்தில் மகிந்த ராசபக்சவுடன் நேரடியாக பேசி ஒரு இணக்கத்திற்கு வருவது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ரெலோ இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் மீண்டும் அக்கட்சியில் இணைத்து கொள்ளப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார். தற்போது தாம் மகிந்த ராசபக்சவுடன் தனியாக பேசப்போவதாக அறிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கையில் சிவாஜிலிங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல