செவ்வாய், 4 டிசம்பர், 2012

யார் இந்த ஜெசிக்கா?

ஜெசிக்காவிற்கு தற்போது வயது 26.அவர் ஒரு குழந்தைக்குத் தாயாகியுமிருக்கிறார். யார் இந்த ஜெசிக்கா? அவர் எப்படிப் பிரபலமானார்? அனைவரும் அறிந்திருக்கவேண்டியதொன்று.

1987ம் ஆண்டு ஒக்ரோபர் 14ம் திகதி ரெக்சாஸ் மாநிலத்தின் “:மிட்லாண்ட்” நகரில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஜெசிக்கா அங்கு கைவிடப்பட்டிருந்த குழாய்க் கிணறொன்றில் தவறி விழுந்துவிட்டாள். 8 அங்குல விட்டம் கொண்ட 20 அடி ஆழமானதுமான அந்தக் குழாய்க் கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது அமெரிக்கர்களின் சாதனையே!

பக்கோ இயந்திரம் மூலம் குழாய்க்கிணற்றுக்கு அருகில் தோண்ட முயற்சி செய்தபோது கடினமான பாறை இடம் கொடுக்கவில்லை.காப்பாற்றும் படையினர் தீவிரமாகச் செயற்பட்டனர்.ஜெசிக்கா சுவாசிப்பதற்கு குழாய்க் கிணற்றினுள்ளே ஒக்சிஜன் செலுத்தப்பட்டது. ஜெசிக்காவின் குரலைக் கேட்பதற்காக ஒலிவாங்கி உள்ளே செலுத்தி ஜெசிக்காவுடன் பேசுக் கொடுத்தார்கள். விசேட ஜெற் விமானம் மூலம் எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதில் மிகப் பிரபல்யம் பெற்ற பொறியியலாளர் அங்கு வரவழைக்கப்பட்டார். வாட்டர் ஜெற் எனப்படும் விசேட தொழில் நுட்பம் மூலம் அந்தக் குழாய்க் கிணற்றுக்கு அருகில் இன்னொரு 30 அங்குலம் அகலத்தில் 29 அடி ஆழத்திற்கு குழாய்க் கிணற்றைத் தோண்டி ஜெசிக்கா அகப்பட்டிருக்கும் ஆழத்திற்கு கீழே இரண்டு கிணற்றிற்கும் இடையில் துளை போட்டுத் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் காப்பாற்றும் படையினர் தீவிரமாகச் செயற்பட்டனர்; எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதில் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள் பலர் உதவியாளர்களாகச் செயற்பட்டனர்.

முதல் முயற்சியில் ஜெசிக்காவை எட்ட முடியவில்லை. ஜெசிக்கா அழுவதும் பின்னர் தூங்குவதுமாக இருந்தாள். அமெரிக்கா முழுவதும் ஜெசிக்காவிற்காக பிரார்த்தனை செய்தது. உலகம் முழுவது செய்தி பரவியது. இரண்டாவது முயற்சியில் ஜெசிக்கா 58 மணித்தியாலங்களின்பின் கிட்டத்தட்ட இரண்டரை நாட்களின் பின் ஜெசிக்கா குழாய்க் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டாள். புதன்கிழமை குழய்க் கிணற்றிக்குள் அகப்பட்டிருந்த குழந்தை ஜெசிக்கா வெள்ளிகிழமை இரவு .7.55 மணிக்கு காப்பாற்றப்பட்டாள். வெளியே மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரித்தார்கள் ஜெசிக்காவின் மீட்பு அமெரிக்கா முழுவது பிரபலமானது. ரெக்சாஸ் மாநிலமே மகிழ்ச்சியில் கொண்டாடியது. ஜெசிக்கா மறுஜென்மம் எடுத்தாள். ஜெசிக்காவிற்கு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளுடைய காலில் 6 சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தை ஜெசிக்காவை அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தனது மனைவியுடன் சென்று வைத்தியசாலையில் பார்வையிட்டார். ஜெசிக்காவிற்கு பரிசுப் பொருட்கள் குவிந்தன. 8 லட்சம் டொலர்கள் பணம் அன்பளிப்பாகக் கிடைத்தது. ஜெசிக்காவைக் காப்பாற்றிய காட்சியை உலகமே பார்த்து வியந்தது. மிட்லாண்ட் நகரம் முழுவதும் ஆலயங்களில் மணிகள் ஒலித்தன. ஜெசிக்காவைக் காப்பாறிய ஹீரோக்களைக் கௌரவித்து மிட்லாண்ட் நகரில் மக்கள் ஊர்வலம் செய்தார்கள்.

ஜெசிக்கா விழுந்த குழாய்க் கிணறு இனிமேல் குழந்தைகள் விழுந்துவிடாதபடி இரும்பினால் மூடி ஒட்டபட்டது. ஞாபகார்த்தமாக சுற்றிவர பூங்கன்றுகள் நாட்டப்பட்டன. இதுவே வேஎறு நாடுகளாக இருந்திருந்தால் குழந்தை காப்பாற்றப்பட்டிருக்குமா என்பது சந்தேகம். பல வருடங்களுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் ஒரு குழந்தை குழாய்க் கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது. இந்தியாவில் பல குழந்தைகள் இப்படியான கிணறுகளுக்குள் விழுந்து இறக்கின்றன. அது பற்றி அந்த நாடுகள் கவலை கொள்வதில்லை. குழந்தை ஜெசிக்காவின் கதை திரைப்படமாகியது. Everybodys Baby: The Rescue of Jessica McCulure என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படமும், “மலூட்டி” என்ற பெயரில் மலையாளத்தில் இயக்குனர் “பரதன்” திரைப்படமாக்கியிருந்தார். பேபி ஷாம்லி, ஜெயராம், ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். “The Well” பாடல் அல்பம் Charlie Whitemussel என்பவரால் வெளியிடப்பட்டது. பிரபலமான குழந்தை ஜெசிக்கா இன்று 26 வயதான தாயார் ஜெசிக்கா ஆகிவிட்டார்.

Jessica is now happily married to Daniel Morales and is a stay-at-home mother to Simon, 4, and Sheyenne, 18-months





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல