திங்கள், 3 டிசம்பர், 2012

இலங்கையில் இருந்து சென்ற பாதிரியார் நியூசிலாந்தில் கைது!

252 பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஆஸ்திரேலியாவால் தேடப்பட்டு வருகின்ற முன்னாள் பாதிரியார் பெர்னாத் மெக்கிரத் - வயது 65 நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கையில் தங்கி இருந்த இவர் கடந்த வியாழக்கிழமை கிளம்பிப் போய் இருக்கின்றார். கடந்த வெள்ளிக்கிழமை கைது இடம்பெற்று உள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் தேவாலயம் ஒன்றில் 1970 மற்றும் 1980களில் பணியாற்றியபோது நியூசிலாந்து நாட்டவரான இவர் பல டசின் சிறுவர்களை கற்பழித்தார் மற்றும் துஷ்பிரயோகம் செய்தார் என்பதுதான் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்.

கைது செய்யப்படுவார் என்று தெரிந்து கொண்டுதான் இவர் திரும்பவும் நியூசிலாந்து வந்து இருக்கின்றார், பத்திரிகைகள், கைது செய்யப்படுவார் என்கிற செய்தியை இணையங்கள், பத்திரிகைகள் மூலமாக அறிந்த நிலையிலும் வந்திருக்கின்றார், எனவே தப்பிச் செல்ல மாட்டார், இவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, இவர் நாட்டை வெளியேறாமல் இருக்கின்றபடியான நிபந்தனைகளுடன் இவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென பெர்னாத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரினார். நீதிமன்றம் பெர்னாத்தை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விட்டு உள்ளது

இவர் கிறிஸ்ற்சேர்ச்சில் உள்ள சகோதரியுடன் தங்கலாம், மீண்டும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கக் கூடாது, 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது, பொலிஸ் நிலையத்தில் வாரத்தில் மூன்று தடவைகள் ஆஜராக வேண்டும் போன்ற பிணை நிபந்தனைகள்.

இவர் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டபோது பொதுமக்கள் குவிந்து கலவரப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வழக்குக்காக இவர் மத்திய நகர நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல