வியாழன், 10 ஜனவரி, 2013

ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பணமாக்கும் கமலஹாசன்

ஈழப் போராட்டம் என்பது தமிழ் நாட்டின் சினிமா வியாபாரிகளின் மற்றொரு உணர்ச்சி மையமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைக்கு ஜனநாயக முகத்தை வழங்குவதற்காக ஈழ மக்களின் அவலம் பயன்படுத்தப்படும் அதே வேளை தமிழக சினிமாவில் மக்களை உணர்ச்சியூட்டிக் கொள்ளையடிப்பதற்காகவும் பாசிச அரசினால் கொல்லப்படும் மக்களின் அவலம் பயன்படுத்தப்படுகின்றது.

பால் தக்கரே போன்ற இந்து அடிப்படை மதவெறியார்களால் ஆட்கொள்ளப்பட்டதாக மும்பாயில் கூறிய ரஜனிகாந்தின் திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படுவதன் சற்று முன்பாக மட்டும் அவருக்கு ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் பிறக்கும்.

சீமான், வை.கோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் ஈழத் தமிழர்கள் அவலத்தை அரசியல் வியாபாரமாக்குவதைப் போன்று சினிமாவிலும் இந்த அவல வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டி ஒன்றில் பிரபாகரனுடன் கமலஹாசன் கைகோர்த்துக்கொண்டு நிற்பதாக இன்று மதுரையில் வெளியிடப்பட்டடிருந்தது.

முஸ்லீம்கள் மீதான இந்து பாசிச ஒடுக்குமுறையைக் கலையாக்கிய கமலஹாசனுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?

தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகளைப் புறக்கணிப்பதன் ஊடாகவே அவமானகரமான வியாபாரிகளை வெளியேற்றுவதற்கான முதல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

இனியொரு இணையம்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல