ஞாயிறு, 13 ஜனவரி, 2013

நாய் ஏற்படுத்திய அதிர்ச்சி

அமெரிக்காவில் வெர்ஜீனியா அருகேயுள்ள நார்புலாக் என்ற இடத்தில் வீதியில் சிங்கக்குட்டி போன்ற ஒரு பிராணி உலா வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பலர் அவசர போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.



உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் அந்த பிராணி மாயமாகி விட்டது. இதனால் போலீசார் அங்குள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்று சிங்கம், புலி ஆகியவை தப்பி ஓடி விட்டதா? என கணக்கெடுத்தனர். அங்கு விலங்குகளின் எண்ணிக்கை சரியாக இருந்தன. அங்கிருந்து எந்த விலங்கும் தப்பவில்லை என தெரியவந்தது. மேலும் சில இடங்களிலும் சிங்கக்குட்டி வீதியில் நடமாடுவதாக புகார்கள் வந்தன.

இதற்கிடையில் சிங்கக்குட்டியாக உலா வந்த பிராணி அப்பகுதியில் வசிக்கும் டேனியல் என்பவரின் வீட்டு நாய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது நாயின் முடியை சிங்கம் போல காட்சி தரும் வகையில் ‘ஷேவ்’ செய்திருந்தார். அதுவே எதிர்பாராமல் தப்பி வெளியே ஓடி வந்து இந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல