வெள்ளி, 11 ஜனவரி, 2013

ரிசானாக்களுக்கு கவிதையால் ஒரு அர்ச்சனை!

ரிசானா நபீக்கின் சிரச் சேதம் இளகிய இதயம் உடைய மக்களின் கண்களை ஈரம் ஆக்கி உள்ளது.

இவர்களில் ஒருவர் ரிசானா நபீக்குக்கும், குடும்பத்தை கரையேற்றுகின்றமைக்காக ரிசானா நபீக் போன்று சவூதி உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்கின்ற ஏனைய பெண்களுக்குமாக சமர்ப்பணம் செய்து கவிதை எழுதி உள்ளார்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் கவிதை அமைந்து உள்ளது.

“ உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கஷ்டங்கள் கலஞ்சோடிப்போக…!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
கண்ணப்போல் உனையென்றும் புள்ளநான் காப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்…!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம…?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்…!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்…?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய கலியாணம் முடிச்சார்…

புழிஞ்ச தேங்காப் பூவப்போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க
கிழிஞ்ச ‘சல்வார’ மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க…?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்…?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையால மழையால அழிஞ்சிதான் போனோம்
‘எம்பி’மார் பொய்கள கேட்டா-உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்…!

அதுவரும் இதுவரும் என்பார்-உம்மா
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-’சேர’;
எடுபிடி அனுப்பி ‘பிஸி’ எனச்சொல்வார்…

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு….

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா ‘ஏசி’
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா…

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு…!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு…..

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காங்க ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க…

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்…!! ”
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல