வெள்ளி, 11 ஜனவரி, 2013

ஆங்கிலம் கற்கும் பிரேசில் விலைமாதர்கள்…!!!

பிரேசிலில் அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள், மற்றும் இவ்வருடம் நடைபெறவுள்ள கொண்பெடெரேசன் கிண்ணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அங்குள்ள விலைமாதர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் பெலோ ஹொரிஸொண்டோ நகரிலேயே இதற்கான வகுப்புகள் நடைபெறவுள்ளன.

போட்டிகளைக் காண வெளிநாட்டிலிருந்து அதிகப்படியான பயணிகள் அந்நாட்டுக்கு வருவர் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அவர்களுடன் தொடர்பாடும் பொருட்டே ஆங்கிலமொழி கற்பிக்கப்படவுள்ளது.

ஆங்கிலம் கற்பதற்கென தற்போது 20 விலைமாதர்கள் இணைந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் 300 பேர் வரை இதற்கென இணைவார்கள் என பிரசிலீய விலைமாதர்கள் சங்கத்தலைவி சீடா வீரா தெரிவித்துள்ளார்.

சுமார் 8 மாதத்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆங்கிலம் மாத்திரமன்றி பிரஞ்ச் மற்றும் இத்தாலிய வகுப்புகளும் நடைபெறவுள்ளன.

பிரேசிலில் விபச்சாரம் சட்டபூர்வமானதென்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல