வெள்ளி, 11 ஜனவரி, 2013

குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று அதிகாலை குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாரிசில் இன்று அதிகாலை சுட்டுக் கொலைப்பட்ட குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகளில் மூவரில் இருவர் அந்த அமைப்பின் உயர் மட்டத்தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது

பாரிசின் பத்தாவது நிர்வகப் பிரிவின் 147 றூ லா பயட் என்று முகவரியில் உள்ள குர்திஸ்தான் சமூக அமைப்பின் பணிமனையில் அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் படுகொலைச் சம்பவம் பிரான்ஸ் அரசியல் மட்டத்திலும் குர்திஷ் இனமக்கள் மத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் போராளிகளில் ஓருவர் ரோஜ்பின் என்ற இயக்கப்பேரால் குர்திஷ் மக்களால் அறியப்பட்ட பிடான் டோகான் என்ற இயற்பெருடைய மூத்த போராளி என்றும் 32 வயதான இவர் பிகேகே எனப்படும் குர்திஷ் விடுதலை இயக்கத்தின் முன்னணி அமைப்பான குர்திஷ் தேசிய சபையின் உறுப்பினர் என்றும் பிரான்சிலுள்ள குர்திஷ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்றவர் பிகேகேயின் மூத்த உறுப்பினரும் இணை தலைவர்களில் ஒருவவருமான சங்கி கொன்சிஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்றாவர் லைலா சொய்லமேஸ் என்ற இளம் செயற்பாட்டாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது

இவர்களில் இருவருக்கு மார்பிலும் ஒருவருக்கு தலையிலும் சூடுபட்டுள்ளது. ஓலிக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்ட துப்பாக்கி மூலமே இவர்கள் மூவரும் சுடப்பட்டிருக்க வேண்டும் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால் இது ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரவாத நடவடிக்கை என்றும் இது தொடர்பான உரிய விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்த படுகொலை சம்பவத்தை விசாரக்கும் பொறுப்பு பாரிஸ் நகர குற்றவியல் காவல்துறையினரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

சம்பவம் நடைபெற்ற இடத்தில் ‘நாங்கள் குர்தியர்கள்’ என்ற சுலோக அட்டைகளுடனும் குர்திஷ்தான் விடுதலை இயக்க கொடிகளுடனும் கூடிய ஆயிரக்கணக்கான குர்திஷ் இனமக்கள் இந்த படுகொலை சம்பவம் ஒரு அரசில் படுகொலை என்றும் மரணதண்டனையை நிறைவேற்றும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனா.

இது நிச்சயமாக துருக்கி உளவுத்துறையின் செயலே என்று பாரிசிலுள்ள குர்திஷ் அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்;. துருக்கி அரசு இந்த படுகொலைகள் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல