வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

வழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த நீதிபதி

ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சி வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டிய நீதிபதியோ, தனது இருக்கையில் சொகுசாக சாய்ந்தபடி குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சமீபத்தில் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட வழக்கை அந்த நீதிபதி எந்த லட்சணத்தில் விசாரித்தார் என அவர் குறட்டை விட்ட வீடியோ காட்சிகளுடன் ஒரு இணையதள பத்திரிகை விமர்சித்து இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீதிபதி யெவ்கெனி மக்னோவை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, தலைமை நீதிபதியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல