புதன், 22 மே, 2013

பிரபாகரன் ஒரு கோழை: சீமான் சுண்டைக்காய்!

”நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாமில் தீவிரவாதத்தையெல்லாம் அடக்கி உள்ளோம்.அகவே எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்” என்றும் ”விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி!

புதுவையில் நடைபெற்ற ராஜிவ் நினைவு ஜோதி யாத்திரை வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய நாராயண சாமி, “ராஜீவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார். அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது, விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம்.

தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கக் கூடிய ஒரு கூட்டம் தமிழகத்திலும், புதுவையிலும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திரைப்பட இயக்குனர் சீமான் கடலூரில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் தலைவரின் புகைப்படத்தை பிரசுரித்து கூட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டார். ஆனால் அந்த கூட்டத்துக்கு தமிழக அரசு தடைவிதித்தது. இது நியாயமான சரியான நடவடிக்கை.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு கோழை. அப்பாவி மக்களையும், பெண்களையும், சிறுவர்களையும் போரில் கேடயமாக பயன்படுத்தியவர் வீரனா? இலங்கைக்கு ராஜிவ் காந்தி சென்றபோது ராணுவ வீரரால் தாக்கப்பட்டார். அதிலிருந்து அவர் உயிர்பிழைத்தார். வெற்றியோ, தோல்வியோ போரை முன்னின்று நடத்தி செல்பவர்தான் வீரன், பதுங்கி கொண்டவர்கள் வீரன் அல்ல.

சீமான் தமது கட்சி கூட்டத்தில், காஷ்மீர் தீவிரவாதி யாஸ்மின் மாலிக்கை அழைத்து வந்து பேச செய்துள்ளார். தீவிரவாதத்தையும், பிரிவனை வாதத்தையும் தூண்டுபவர்கள் தேச துரோகிகள். சீமானை பொறுத்த வரையில் பல முறை அவர் சிறைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் சிறைக்கு செல்லவே விரும்புகிறார். தமிழக அரசின் வழக்குக்கு பிறகு அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். நக்சலைட்டு தீவிரவாதத்தையும், அசாமில் தீவிரவாதத்தையும் அடக்கி உள்ளோம். எங்களை பொறுத்தவரை சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை மக்கள தூக்கி எறிய வேண்டும்” என்று பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்,”கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். எனவே அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், அதற்கு துணை போன காங்கிரசுக்கு எதிராகவும் ஒருமித்த கருத்து உருவாகி வரும் வேளையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் பிரிவினை சக்தியை உருவாக்க முயற்சி செய்யும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று அதில் கூறி உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல