புதன், 22 மே, 2013

பாப்பரசர் பேய் ஓட்டினாரா... ஆசி வழங்கினாரா... ????? (காணொளி இணைப்பு)

பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வத்திக்கான் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம்.

இதன்மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஈடுபடுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் என்ற கருத்தும் நிலவுகிறது..

வத்திக்கான் இக்குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல