புதன், 22 மே, 2013

‘சிம்புவானந்தா’வாக மாறிய வம்பு நாயகன்!

’லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு முன்னெல்லாம் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கி பரப்பரப்பாக பேசப்பட்டார். அத்துடன் தனுசுடன் மோதல், சக நடிகர்கள் பற்றி தன் படங்களில் வசனம் வைத்து கேலி செய்தல் என்றெல்லாம் வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலங்களில் இந்த வம்பு நாயகன் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. இப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் படங்களில் கூட இமேஜ் பார்க்காமல் நடிக்கிறார்.அல்லது பாடுகிறார்.

அதே சமயம் பேச்சிலும் மென்மையை கடை பிடித்து. ஆன்மீக செயல்பாடுகளிலும் ஈடுபட தொடங்கி உள்ளாராம். முன்னெல்லாம் சிம்புவுக்கு பிடித்த உணவாக இருப்பது அசைவம். அந்த உணவு வகைகளையெல்லாம் தற்போது சாப்பிடுவதை தவிர்க்கிறார். நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் விருந்துகளிலோ விழாக்களிலோ பங்கேற்பதையும் நிறுத்தி உள்ளாராம். மேலும் நண்பர்களுடன் சுற்றுவதையும் குறைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி தனியாக கண்களை மூடி பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்கிறார்.

இவ்வளவிற்கும் தற்போது வாலு, வேட்டை மன்னன் என இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்புஅண்மையில் கூட ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்து யாருக்கும் தெரியாமல் கிரிவலம் வந்து சென்றுள்ளார். போன் வாரம் யாருக்கும் தெரியாமல் சிரிப்பு நடிகர் மயில்சாமியுடன் காரில் கிரிவலம் வரும் போது(?) அங்குள்ள ஒரு பாறையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் அடிக்கடி இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்வது உண்டு. அவர் வழியில் லிட்டில் ஸ்டார் சிம்புவும் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற் கொள்கிறாராம். ஒரு பட ஷுட்டிங்கிற்க்காக கோவா போனவர் அங்கிருந்து புனித ஸ்தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கும் சென்று வழிபட்டாராம். இது அவரது முதல் இமயமலை பயணம் ஆகும் என்று தன் பி. ஆர். ஓ. மூலம் செய்தி அனுப்பியுள்ளார். நேற்று கேதார்நாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டாராம்..

இதை பற்றி கேட்ட போது ”ஆம்…, நான் இப்போது ஆன்மீகத்தில்தான் கவனம் செலுத்துகிறேன் , இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் போன்றவை எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல , ஞானம் தேடுதல் தான் . நான் அந்த தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன் .இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும் மெருகேற்ற உதவும் என நம்புகிறேன்” ‘என்கிறாராம் ‘சிம்புவானந்தா!.

கோடங்கி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல