ஞாயிறு, 16 ஜூன், 2013

பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?

பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.

இதன் விளைவு...... "அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில் குறைந்த விலையில் அளித்து பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை டெஸ்டிங்கிறகு உட்படுத்துகிறது’ என்ற அதிர்ச்சித் தகவலை முன்னரே சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். அதிலும் ”பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்" என்றெல்லாம் உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையே வெளியிட்டு இருந்தது..

மேலும் கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. அப்போது, சில ஹார்மோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.இந்த காலக்கட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் தூண்டலை தடை செய்து விடுகிறது. இதனால், அந்த தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போதே மலட்டுத் தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாகவும் முன்னரே கூறியிருந்தாகள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்நிலையில், சராசரி பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனங்களில் 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலந்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள வாசனை திரவிய நிறுவனம் அதிர்ச்சி தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது.அதாவது குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரு முறையாகிலும் பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயத்தில் (லிப்ஸ்டிக்) 9 வகை ரசாயனங்கள் கலந்துள்ளன.

சராசரியாக மனித உடல் கிரகித்துக் கொள்ளும் அளவிற்கும் 20 சதவீதம் அதிகமாக அலுமினியம், காட்மியம், மேங்கனீஸ், குடல் புற்று நோய்க்கு காரணமான குரோமியம் போன்ற உலோக கலவைகளும் லிப் ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பற்பசை, ஷாம்பூ போன்றவை நீண்ட காலத்திற்கு காலாவதியாகாமல் இருப்பதற்காக அவற்றில் சிந்தெட்டிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இதன் விளைவாக மார்பக புற்றுநோய் மற்றும் மலட்டுத் தன்மைக்கு பெண்கள் உள்ளாகும் அபாயம் உள்ளது.இது போல், பெண்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான அழகு சாதனங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய 500க்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்களில் கலவை பயன்படுத்தப்படுகிறது.

தற்கால இளம்பெண்கள் விரும்பும் ‘அற்புத’ வளர்ச்சி, முகமாற்று அறுவை சிகிச்சை போன்ற முறைகளிலும் அதிக ஆபத்து உள்ளது.

இவ்வகை சிகிச்சைகளினால் விரைவில் முதுமை எய்துதல், முகச் சுருக்கம், நீரிழிவு நோய், மருந்து மாத்திரைகளின் சக்தியை கிரகித்துக் கொள்ள முடியாத இயல்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல