ஞாயிறு, 16 ஜூன், 2013

மணிவண்ணனுக்கு பாரதிராஜா அஞ்சலி – மாலையில் உடல் தகனம்

சென்னை: மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று மாலை மணிவண்ணனின் உடல் தகனம் நடைபெறுகிறது. மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று மாலை உடல் தகனம் நடைபெறுகிறது.

இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படுகிறது.

பாரதிராஜா வந்தார்
மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

மணிவண்ணனுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் அஞ்சலி
சென்னை: மறைந்த இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் மணிவண்ணனுக்கு திரையுலகினரும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

59 வயதான இயக்குநர் மணிவண்ணன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரையும், திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தகவல் அறிந்ததும் மணிவண்ணனின் நெருங்கிய தோழர் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் மணிவண்ணன் வீட்டுக்கு விரைந்து சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மணிவண்ணன் உடலுக்கு புலிக்கொடி போர்த்தி வீர வணக்கம் செலுத்தினார்.

இசைஞானி இளையராஜா மணிவண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட இளையராஜா, மணிவண்ணன் உடலுக்கு அருகே சிறிது நேரம் நின்றிருந்தார்.

மணிவண்ணனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்பது நினைவிருக்கலாம்.

நடிகர்கள் செந்தில், விஜய், சாந்தனு, இயக்குநர்கள் பாக்யராஜ், தங்கர்பச்சான், பாலா, அமீர் உள்ளிட்டோர் நடிகைகள் கோவை சரளா, வடிவுக்கரசி, சரண்யா உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினர் மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பாமக தலைவர் ஜி.கே.மணி தனது கட்சியினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தனது கட்சியினருடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் மணிவண்ணன் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மணிவண்ணனின் மகனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலும் கூறினார் விஜயகாந்த்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல