செவ்வாய், 9 ஜூலை, 2013

ஒற்றை கால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தாச்சு!+ வீடியோ

நமக்கு ஏற்கெனவே பரிட்சயமானது மோனோ சைக்கிள் என்றழைக்கப்படும் ஒற்றை வீல் கொண்ட மோட்டார்சைக்கிள். ஏற்கனவே நமக்கு பரிட்சயம். ஆனால், இப்பொழுது தயாராகி விற்பனைக்கு வரப் போகும் இந்த ஒற்றை கால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்(யூனி சைக்கிள்) அந்த கான்செப்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக்கும்.

ஆம். அமெரிக்காவை சேர்ந்த போர்ட்லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்த ஒற்றை சக்கரத்தில் செல்லும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. சாதாரண மோட்டார் சைக்கிள் போன்றே கைப்பிடிகள் பிடித்து ஓட்டக் கூடிய இந்த புதிய ஸ்கூட்டர் செக்வே ஸ்கூட்டர்கள் போன்று தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் தொழில் நுட்பம் கொண்டது.

அத்துடன் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 32 கிமீ வரை செல்லும். மேலும், மணிக்கு அதிகபட்சமாக 30 கிமீ வேகம் வரை செல்லலாம்.
இதையெல்லாம் விட பிரத்யேகமான பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் சைக்கிள்- பைக் நகர்ப்புறத்தில் பெரிதும் பயன்பாடு கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டே விற்பனைக்கு வரவிருக்கிறது இந்த ஒற்றை சக்கர சாகச சைக்கிள் ரைனோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பைக் கிட்டத்தட்ட ரூ.2.25 லட்சம் விலை என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஆந்தைரிப்போர்ட்டர்
Share |

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல