வேர்ட் புரோகிராமில், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் டூல் இணைந்தே உள்ளது. நாம் டாகுமெண்ட் தயாரிக்கும்போதே, எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டாலும், இந்த டூலைப் பயன்படுத்தி மீண்டும், மீண்டும்
பிழைகளைத் திருத்தலாம். இது எழுத்துப் பிழைகளை மட்டுமின்றி, சரியான முறையில் சில சொற்களின் முதல் எழுத்துகள் பெரிய எழுத்துகளாக அமைக்கப்பட்டுள்ளனவா, தேவையில்லாமல் ஒரே சொல் திரும்ப
திரும்ப இடம் பெற்றுள்ளதா என்றும் சோதனை செய்கிறது.
ஸ்பெல் செக்கர் டூலை இயக்க, எப்7 கீயை அழுத்தினால் போதும். அல்லது ரிப்பனில், ரிவியூ டேப் அழுத்தி, கிடைக்கும் மெனுப் பட்டியில், முதலாவதாக இடம் பெற்றுள்ள ஸ்பெல் செக்கர் ஐகானில் கிளிக் செய்தால் போதும். பிழைகள் கண்டறியும் போது, ஸ்பெல் செக்கர், டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதில் பிழைகள் உள்ள சொற்களைக் காட்டும். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட பரிந்துரைக்கப்படும். இவற்றை நீங்கள் ஏற்று, அதற்கான பாக்ஸில் கிளிக் செய்திடலாம். அல்லது தேவை இல்லை எனில், வேண்டாம் என ஒதுக்கிவிடலாம்.
டாகுமெண்ட் முழுவதும் ஸ்பெல் செக் செய்திட வேண்டும் என்பதில்லை. சந்தேகம் ஏற்படும் அல்லது டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து, அதனை மட்டும் செக் செய்திட மேலே கூறியபடியே கட்டளை கொடுக்கலாம்.
குறிப்பிட்ட பகுதியை செக் செய்திடுகையில், ஸ்பெல்லிங் சோதனை முடிந்தவுடன், ஸ்பெல் செக்கர், டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, மீதம் உள்ள டாகுமெண்ட்டையும் சோதனை செய்திடவா என்று கேட்கும். தேவை இல்லை என்பதால், No என்பதில் அழுத்தி, ஸ்பெல் செக்கர் சோதனையை நிறுத்திவிடலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக