வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சோனியாவின் பிளாக் பெர்ரி போன் 'மிஸ்ஸிங்'...!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிளாக் பெர்ரி போனை கடந்த 2 நாட்களாக காணவில்லையாம். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள அந்த போன், சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியபோது காணாமல் போய் விட்டதாம்.

அந்த போனில் பல முக்கியமான இமெயில்களும், எஸ்எம்எஸ் செய்திகளும், பிற தகவல்களும் அடங்கியுள்ளதாம்.

தற்போது அது ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடிக்க சைபர் குற்றத் தடுப்புப் போலீஸார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதில் எஸ்பிஜி அதிகாரிகளும் இறங்கியுள்ளனராம்.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு ராகுல் காந்தியின் செல்போன் டெல்லி விமான நிலையத்தில் திருடு போனது. லண்டனிலிருந்து திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. இருப்பினும் 2 நாட்கள் கழித்து ஒரு லக்கேஜ் பரிசோதகரிடமிருந்து அந்த போன் மீட்கப்பட்டது. இப்போது மகனைப் போல தாயும் தனது போனைத் தொலைத்து விட்டு நிற்கிறார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல