வியாழன், 29 ஆகஸ்ட், 2013

தமிழ் கூட்டமைப்பின் நான்காம் மாடி இரகசியம் அம்பலம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு அழைக்கின்றமை குறித்த இரகசியத்தை தாய்நாடு தளத்துக்கு புட்டு வைத்து
உள்ளார் பாதுகாப்புத் துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர்.

இவர் மேலை நாடு ஒன்றில் உள்ள தூதரகத்தில் தற்போது இராணுவ விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.

சிறிதரன் எம். பி, அரியநேத்திரன் எம். பி போன்றோர் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி நான்காம் மாடிக்கு அழைக்கப்படுகின்றமை குறித்து இவர் தெரிவித்து உள்ள கருத்துக்கள் பேரதிர்ச்சி தருவனவாக உள்ளன.

“ தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் நான்காம் மாடிக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றபோது ஆவணக் கோவைகளை கைகளில் சுமந்து கொண்டு செல்கின்றார்கள். ஏன் என்று தெரியுமா? இவர்களால் பாதுகாப்பமைச்சு செயலாளர் முன்னிலையில் நேரில் சென்று தமிழர்களை காட்டிக் கொடுக்கின்ற வேலைகளை செய்ய முடியாது.

இதனால் நான்காம் மாடி என்று ஒரு செட் அப். நான்காம் மாடி முன்னாள் புலிகளுக்குத்தான் கசப்பான இடம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு மிகவும் இனிப்பான இடம். உள்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் அதிகாரிகளுக்கு கூட்டமைப்புக்காரர்கள் அறிக்கையிடுவார்கள், வாக்குமூலங்கள் கொடுப்பார்கள்.

இவற்றுக்கு பிரதி உபகாரமாக, நன்றிக் கடனாக கொழும்பில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கான அனுமதி, வெளிநாட்டு பயணங்களுக்கான விசாக்களுக்கு சிபாரிசுகள், மதுபான விற்பனைக் கூடங்களுக்கான அனுமதி,
சுங்கத் தீர்வையற்ற கார்களுக்கான அனுமதி, பிள்ளைகளுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்குமான வெளிநாட்டு புலமைப் பரிசில்கள் என்று அரசால் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.

இதனால்தான் அரியநேத்திரன் எம். பிக்கு கிழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மது பான விற்பனை நிலையங்கள் உள்ளன. கூட்டமைப்புக்காரர்கள் அரசியல் அங்கிடுதத்திகள்.

மட்டும் அன்றி நான்காம் மாடி விசாரணைகளுக்கு என்று அழைக்கப்பட்டு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் எவரும் இது வரை கைது செய்யப்படாமைக்கும், பகிரங்கமாக வீராப்பு பேசி திரிகின்றமைக்கும் இந்த நான்காம் மாடி இரகசியமே காரணம்.

நான்காம் மாடியில் என்ன சொன்னார்கள்? என்பதை கூட்டமைப்பின் சம்பந்தப்பட்ட எந்த உறுப்பினராவது தமிழ் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி இருக்கின்றாரா? இவ்வாறு பகிரங்கப்படுத்துவார்களானால் உண்மைத்
தன்மையை வெளிப்படுத்த நான் தயாராக உள்ளேன். ”

தாய்நாடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல