சனி, 3 ஆகஸ்ட், 2013

நாய்­க­ளுடன் ரமழான் வாழ்த்துச் செய்­தியை தெரி­வித்த மலே­சியப் பெண் கைது


ரமழான் பண்­டி­கையைக் கொண்­டாட தயா­ரா­கு­ப­வர்­க­ளுக்கு வீடி­யோவில் தனது நாய்­க­ளுடன் அமர்ந்­த­வாறு வாழ்த்துச் செய்­தியைத் தெரி­வித்த பெண் ஒரு­வரை மலே­சியப் பொலிஸார் புதன்­கி­ழமை கைது செய்­துள்­ளனர்.

நாய்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­வ­ரான மஸ்னஹ் யுஸொப் என்ற மேற்படி பெண் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டுள்ளதை வெளிப்படுத்தும் ஒலி பின்­ன­ணியில் ஒலிக்க தனது 3 நாய்­க­ளுக்கு உணவு ஊட்­டு­வதை மேற்­படி வீடியோக் காட்சி பிர­தி­ப­லிக்­கி­றது.

இஸ்­லா­மிய மதத்தைப் பொறுத்­த­வரை நாய்கள் அசுத்­த­மான உயி­ரி­னங்­க­ளாக கரு­தப்படுகின்றன.

இது தொடர்பில் மஸ்னஹ் (38 வயது) விப­ரிக்­கையில், தான் இஸ்­லாத்தை அவ­தூறு செய்யும் நோக்கில் அந்த வீடியோக் காட்­சியை வெளி­யி­ட­வில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

‘‘நான் எனது மதத்தை நேசிக்­கிறேன். எனது மதம் சுத்தத்தின் அவசியத்தை எனக்கு போதித்துள்ளது’’ என அவர் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல