இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும் முஷ்டியால் குத்தியும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை வீசியும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
தாய்வானிய தலைநகருக்கு அண்மையிலுள்ள மேற்படி அணுசக்தி நிலையத்தின் நிர்மாண பணிகளை பூர்த்திசெய்வதற்கான சீர்திருத்த வாக்கெடுப்பு குறித்தே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜப்பானில் இடம்பெற்ற அணுசக்தி அனர்தத்தையடுத்து தாய்வானில் அணுசக்தி தொழிற்சாலையொன்றை அமைக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
அந்நாட்டின் நான்காவது அணுசக்திநிலையமாக விளங்கும் ‘நியூக் 4’ என்ற மேற்படி அணுசக்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 10 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியடையும் நிலையை நெருங்கியுள்ள நிலையில் அதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக மேம்பாட்டுக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக