சனி, 3 ஆகஸ்ட், 2013

தயா மாஸ்டர் நீக்­கப்­பட்­டது ஏன்?

வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்­கான, வேட்­பா ளர் பட்­டி­யல்கள் வெளி­யா­வ­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தி­ருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்­பி­லேயே ஈ.பி.டி.பி. போட்­டி­யிடப் போவ­தாக அறி­விப்­ப­தற்­கான சந்­திப்பே அது.



டக்ளஸ் தேவா­னந்தா, இந்தத் தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்ற தகவல் பர­வ­லாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அந்தச் சூழலில், இந்தத் தேர்­தலில் நீங்கள் போட்­டி­யி­ட­வில்­லையா என்று செய்­தி­யா­ளர் கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். அதற்கு அவர் நேர­டி­யாகப் பதி­ல­ளிக்­க­வில்லை.

இறு­தி­வரை பொறுத்­தி­ருக்கும் படி யும், வேட்­பாளர் பட்­டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என் றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

உண்­மையில், ஈ.பி.டி.பி.யின் வேட்­பா­ளர்­களில் அப்­ப­டி­யா­ன­தொரு அதி ர்ச்­சியை கொடுக்கக் கூடி­ய­வர்­க­ளாக யாரும் இருக்­க­வில்லை.

ஈ.பி.டி.பி.யில் எதிர்­பார்க்­கப்­ப­டாத ஒரு வேட்­பாளர் சுந்­தரம் டிவ­க­லாலா தான்.

முன்னாள் நிர்­வா­க­சேவை அதி­கா­ரி­யான அவர், கடை­சி­யாக வடக்கு, கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சின் செய­லா­ள­ராக பணி­யாற்றி ஓய்­வு­பெற்­றவர்.

போர் முடி­வுக்கு வந்­த­வு­ட­னேயே, மாகாண சபை ஆசனம் மீது குறி­வைத்­தி­ருந்­தவர்.

அதற்­காக சிலரை அணி­தி­ரட்டி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ள­ராக நிற்­ப­தற்­கான எத்­த­னங்­களை நீண்­ட­கா­லத்­துக்கு முன்­னரே மேற்­கொண்­டவர்.

ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கண்டு கொள்­ளாமல் போனதால், கடை­சி­யாக ஈ.பி.டி.பி. பக்கம் போய் சேர்ந்து தனது மாகா­ண­ சபைக் கனவை நன­வாக்க முயன்­றுள்ளார்.

டக்ளஸ் தேவா­னந்தா கூறிய அதிர்ச்­சி­யான தகவல், டிவ­க­லாலா பற்­றி­யது அல்ல. ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பாளர் பட்­டி­யலில் இருந்து தயா மாஸ்டர் நீக்­கப்­பட்­டது தான் பர­ப­ரப்­பான- அதிர்ச்­சி­யான செய்­தி­யாக அடி­பட்­டது.

இவர் அர­ச­த­ரப்பின் வேட்­பாளர் பட்­டி­யலில் இருந்து நீக்­கப்­பட்­ட­த ற்கு டக்ளஸ் தேவா­னந்­தாவின் நெரு க்­கு­தலே காரணம் என்ற பர­வ­லான கருத்து இருந்த போதிலும், அதனை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த வாரம் நிரா­க­ரித்­துள்ளார்.

எனினும், தயா மாஸ்டர் நீக்கம் பற்­றிய தக­வலை அவர் முன்­னரே அறிந்­தி­ருந்தார் என்­ப­தையே, அவர் கூறிய அதிர்ச்­சி­யான செய்­திக்கு காத்­தி­ ருங்கள் என்ற கருத்து உறு­திப்­ப­டுத்­து­கி­றது. முன்னர், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்­பட்­டி­ருந்த தயா மாஸ்டர், ஆளும் கட்­சியின் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­டு­வ­தற்­காக, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியில் சேர்ந்து கொண்டார்.

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் அர­சாங்­கமும், அவரை நன்­றா­கவே நம்­ப­வைத்து கழுத்­த­றுத்து விட்­டன என்­பதே உண்மை.

ஏனென்றால், தயா மாஸ்­ட­ருக்கு அர­சி­யலில் குதிக்கும் ஆர்­வத்தைத் தூண்­டி­விட்டு, உச்­சியில் ஏற்­றி­விட்டு குப்­புறத் தள்­ளி­விட்­டது அர­சாங்கம் தான். எதற்­காக அர­சாங்கம் இவ்­வாறு நடந்து கொண்­டது? - ஏன் அவர் ஒதுக்­கப்­பட்டார்? என்ற கேள்­விக்­கான சரி­யான பதில் இது­வரை இல்லை. அவரைத் தேடிச் சென்று அர­சி­ய­லுக்குப் பொருத்­த­மா­னவர் என்று இழுத்து வந்த அர­சாங்­கமே, கடை­சி யில் அவரைப் பொருத்­த­மற்­றவர், தகை­மை­யற்­றவர் என்று ஒதுக்கித் தள்ளி விட்­டது.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், யாழ்ப்­பா­ணத்தில் ஊடகம் ஒன்றில் பணி­யாற்றி வந்த, தயா மாஸ்­டரை சுதந்­திரக் கட்சி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட இழுத்து வந்­தது பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­

பக் ஷ தான்.

வடக்கு மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஆரம்பப் பணிகள் தொடங்க முன்­னரே இவரை அர­சிய­லுக்கு இழுத்து வரும் நகர்வை மேற்­கொண்­டி­ருந்தார் கோத்­தா­பய.

அதன் தொடர்ச்­சி­யாக, தயா மாஸ் டர் சுதந்­திரக் கட்­சியில் இணைத்துக் கொள்­ளப்­பட்டார்.

சுதந்­திரக் கட்­சியின் அழைப்பின் பேரி­லேயே தாம் அந்தக் கட்­சியில் போட்­டி­யிட முன்­வந்­த­தா­கவும், அதற்­கா­கவே அந்தக் கட்­சியில் இணைந்து கொண்­ட­தா­கவும், தயா மாஸ்டர் ஊட­கங்­க­ளுக்கு தெளி­வாக கூறி­யுள்ளார்.

ஆக, சுய அர­சியல் ஆர்­வத்­தினால் அவர் இந்த அரங்­கிற்கு வர­வில்லை, அர­சாங்­கத்­தினால் இழுத்து வரப்­பட்­டி­ருந்தார் என்­பதே உண்மை.

இவரை மட்­டு­மன்றி, விடு­தலைப் புலி­களின், முன்னாள் ஆயுதக் கொள்­வ­ன­வா­ள­ரான கே.பி எனப்­படும் செல்­வ­ராசா பத்­ம­நாதன், முன்னாள் மகளிர் அர­சி­யல்­துறை பொறுப்­பாளர் தமி­ழினி ஆகி­யோ­ரையும், வடக்கு மாகாண சபைத் தேர்­த­லுக்கு இழுத்து வர­ மு­யன்­றது அர­சாங்கம். ஆனால் அவர்­க­ளெல்லாம், சாது­ரி­ய­மாக ஒதுங்கிக் கொண்­டதால், தயா மாஸ்­டரைப் போன்ற நிலைக்கு உள்­ளா­காமல் தப்பிக் கொண்­டனர்.

சுதந்­திரக் கட்­சியில் இணைந்து கொண்ட பின்னர், தயா மாஸ்டர் முன்னாள் போரா­ளிகள் பல­ரையும் வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­து­வ­தற்கு முயன்­ற­போ­திலும் அதுவும் கைகூ­ட­வில்லை.

கடை­சியில் அவர் ஒரு­வரே, விடு­தலைப் புலி­களின் முன்னாள் போராளி என்ற அடை­மொ­ழி­யுடன் அரச வேட்­பா­ள­ராக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டார்.

வேட்­பாளர் நேர்­முகத் தேர்வு முடிந்த பின்­னரும், அவர் ஒரு­வரே, அர­ச­த­ரப்பில் போட்­டி­யி­ட­வுள்ள முன்னாள் போராளி என்று அமைச்­சர் கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சுசில் பிரேம் ஜெயந்த் போன்­ற­வர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால் கடை­சியில் சுதந்­திரக் கட்­சியின் பட்­டி­யலில் அவ­ரது பெயர் இருக்­க­வில்லை.

அவர் அதில் இடம்­பெ­றாத தக­வலைக் கூட கட்சித் தலைமை, சக வேட்­பா­ளரும், யாழ்.மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான அங்­கஜன் இரா­ம­நாதன் மூலமே தெரி­யப்­ப­டுத்­தி­யது.

அர­சாங்கத் தரப்பு தயா மாஸ்­டரை திட்டம் போட்டு பழி­வாங்கி விட்­ட­தா­கவே இதனைக் கரு­தலாம்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் பத­விக்­காக அர­ச­த­ரப்­பினால், நிறுத்­தப்­ப­ட­வுள்ள வேட்­பாளர் என்று முன்னர் ஊட­கங்­களில் தயா மாஸ்டர் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டார்.

ஆனால் கடை­சியில் அவ­ரது பெயர் வேட்­பாளர் பட்­டி­யலில் கூட இடம்­பெ­ற­வில்லை.

எதற்­காக இவ­ரது பெயர் நீக்­கப்­பட்­டது என்­ப­தற்கு அர­ச­த­ரப்புக் கூறும் நியாயம் அந்­த­ள­வுக்குப் பொருத்­த­மா­ன­தாக இல்லை.

சுதந்­திரக் கட்­சிக்கு வரை­ய­றுக்­கப்­பட்ட ஆச­னங்கள் தான் இருந்­தன, அவற்­றுக்கு மிகப் பொருத்­த­மான, வெற்­றி­பெறத் தகு­தி­வாய்ந்­த­வர்­க­ ளையே போட்­டியில் நிறுத்­தி­யுள்­ள­தாக, அமைச்­சர்கள் நியாயம் கூறு­கின்றனர். இருந்­தாலும், இது உண்மைக் காரணம் என்று கூற­ முடி­யாது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறி­விப்பு வெளி­யாகு முன்­னரே, அதற்­கான முன்­னா­ யத்­தங்­களை இவரை வைத்தே கோத்­தா­பய ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்­தி­ருந் தார்.

அப்­போது தகை­மை­யா­னவர் என்று தெரிந்­ததால் தான், அவரைத் தேடிச் சென்­றி­ருந்தார் கோத்­தா­பய.

திடீ­ரென அவர் தகை­மை­யற்­ற­வ­ ராக்­கப்­பட்­ட­தற்கு பல்­வேறு கார­ணங்கள் சொல்­லப்­ப­டு­கின்­றன, ஊகிக்­கப்­ப­டு­கின்­றன.

முத­லா­வது – சுதந்­திரக் கட்­சியில் இணைந்த பின்னர், 13ஆவது திருத்­தச்­ சட்­டத்தின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தி வெளி­யிட்ட கருத்து.

இரண்­டா­வது – 13ஆவது திருத்­தச்­சட்ட விவ­கா­ரத்தில், அரச உயர்­மட்­டத்­துக்குள் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ள­தாக கரு­தப்­படும் சூழலில், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வினால் கொண்டு வரப்­பட்­டவர் என்­பதால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கலாம்.

மூன்­றா­வது – அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவின் நெருக்­குதல்.

நான்­கா­வது – விடு­தலைப் புலி­களின் அர­சி­யல்­துறைப் பேச்­சா­ள­ராக இருந்­தவர், அர­ச­த­ரப்பின் மாகாண சபை வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்குக் கூடத் தகை­மை­யற்­றவர் என்று காட்டி அவ­மா­னப்­ப­டுத்­து­வது.

ஐந்து – தனக்குப் பின்னால், ஒரு­தொ­குதி முன்னாள் போரா­ளி­களை அணி­தி­ரட்டி அரசின் பின்னால் கொண்டு செல்லத் தவ­றி­யது.

ஆறு – அர­ச­த­ரப்பு முன்னாள் விடு­தலைப் புலி­களின் தயவில் ஆட்­சியைப் பிடிக்க முனை­கி­றது என்ற விமர்­ச­னங்­களை தவிர்ப்­ப­தற்கு.

ஏழு – அறி­மு­க­மான வேட்­பா­ள­ராக இருந்­தாலும், வாக்­கு­களைக் கவரும் திறன் இவ­ருக்கு இல்லை என்றும், முன்னாள் புலி­யான இவரை அரச வேட்­பா­ள­ராக ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை என்றும் கொடுக்­கப்­பட்ட புல­னாய்வு அறிக்கை கூறு­கி­றது.

இப்­படிப் பல கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன, ஊகிக்­கப்­ப­டு­கின்­றன. இதில் சரி­யான காரணம் என்ன என்­பதை, அரச உயர்­மட்டம் தான் அறியும்.

வேட்­பாளர் தெரிவு முடிந்த பின் னர், இவரும் ஒரு வேட்­பாளர் என்று வேட்­பாளர் தெரி­வுக்­கு­ழுவில் இடம்­பெற்ற அமைச்­சர்­களால் கூறப்­பட்­ட­துடன், இறு­தி­மு­டிவை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் கூறியிருந்தனர்.

தயா மாஸ்டர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், வேட் பாளர்களைத் தெரிவு செய்தது, வேட்பாளர் தெரிவுக்குழுவே என்று தான் தப்பிக் கொண்டார் ஜனாதிபதி.

எது எவ்வாறாயினும், ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பிட்டது போன்று அரசாங்கம் தயா மாஸ்டரின் முதுகில் குத்திவிட்டதாகவே உண ரப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரா கவும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு எதிராகவும் கருத் துக்களை வெளியிட வைத்து, மீண்டும் தமிழ்த் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்து விட்டு, கடைசியில் இவரது காலை வாரிவிட்டது அரசாங்கம்.

அரசாங்கத்தின் தெரிவை ஏற்காது போயிருந்தால் சிலவேளைகளில் இவருக்கு ஈ.பி.டி.பி.யாவது வாய்ப் பைக் கொடுத்திருக்கும்.

ஆனால், இப்போது தயா மாஸ்ட ரின் நிலை அரசனை நம்பி புருஷ னைப் பறிகொடுத்தாக அமைந்து விட்டது.

 கபில்

Virakesari
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல