சனி, 3 ஆகஸ்ட், 2013

தற்கொலை செய்வதற்காக மாடியிலிருந்து குதித்த கணவரைக் காப்பாற்றிய மனைவி (படங்கள் இணைப்பு)

குடி­யி­ருப்பு கட்­ட­ட­மொன்றின் ஆறா­வது மாடி­யி­லி­ருந்து குதித்து தற்­கொலை செய்­து­கொள்ள முயற்­சித்த கண­வரின் காற்­சட்­டையை பற்றிப் பிடித்து அவரை அவ­ரது மனைவி காப்­பாற்­றிய சம்­பவம் வட சீனாவில் இடம் பெற்­றுள்­ளது.

ஜிலின் மாகா­ணத்தில் சங்சுன் நக­ரி­லுள்ள தனது மாடி வீட்டின் படுக்­கை­ய­றை­யி­லி­ருந்து குதித்த தனது கணவர் வாங்­ லீயை (45 வயது) கீழே விழுந்து விடாது தொடர்ந்து 20 நிமி­டங்­க­ளாக ஒற்றைக் கையால் லிங் ஸு என்ற மேற்­படி பெண் பிடித்துக் கொண்­டி­ருந்­த­துள்ளார்.

அவர் உதவி கோரி கூச்­ச­லிட்­டதையடுத்து சம்­பவ இடத்­திற்கு உட­ன­டி­யாக வந்த மீட்புப் பணி­யா­ளர்கள், வாங்­ லீயின் வீடு உட்­பு­ற­மாக தாழி­டப்­பட்­டி­ருந்ததால் வீட்­டினுள் நுழை­வ­தற்கு சிர­மத்தை எதிர்­கொண்­டுள்­ளனர்.

இதன் கார­ண­மா­கவே அப்பெண் தனது கண­வரை கீழே விழாது பல நிமிட நேர­மாக பிடித்துக் கொண்­டி­ருக்க நேர்ந்­துள்­ளது.

தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே பிர­வே­சித்த மீட்புப் பணி­யா­ளர்கள் வாங்­ லீயை பாது­காப்­பாக மேலே தூக்கி காப்­பாற்­றி­யுள்­ளனர்.

தனது தொழில் தொடர்பில் கடும் மன அழுத்­தத்­திற்கு உள்ளாகியே வாங் லீ தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்தாக கூறப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல