திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியது யு.எஸ்? முன்பே அம்பலப்படுத்தியது டெய்லி மெய்ல்!!

சிரியாவில் ரசாயன தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் ரசாயன தாக்குதல்களை நடத்தியதே அமெரிக்காவாகத்தான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாயன தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமெரிக்க கப்பல் படை விரைந்திருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி மெய்ல் 6 மாதத்துக்கு முன்பு வெளியிட்ட ஒரு தகவல் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிரியாவில் ரசாயன தாக்குதலை நடத்திவிட்டு அதை சிரியா அரசு மீது பழிபோட்டு ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறதா? என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியிட்டிருந்தது. இதை யாகூவின் இந்திய இணையதளமும் மறுபிரசுரம் செய்திருந்தது.

ஆனால் தற்போது டெய்லி மெய்ல் இணையதளம் இந்த இணைப்பை நீக்கியிருக்கிறது.

தற்போது சிரியா மீது ராணுவ நடவடிக்கைக்கு உடனே தயாராகிவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருப்பது டெய்லி மெய்ல் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Source:Thatstamil

Image: from the web
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல