வட இலங்கை ஒரு யுத்தம் காரணமாக மோசமாக அழிந்துள்ள போதிலும், அங்கு அபிவிருத்தியிலும் பார்க்க அரசியல் உரிமையே முக்கியம் என்று வடமாகாண மக்கள் வடமாகாண சபைக்கான தேர்தலின் மூலம் அழுத்தி உரைத்திருக்கின்றார்கள். அனைவருக்கும் அழுத்தி உணர்த்தியிருக்கின்றார்கள். வாக்குச் சீட்டுக்களின் மூலம் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் சரியாகப் புரிந்து கெணர்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது இப்போதைய அவசரத் தேவையாக இருக்கின்றது.
வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்தது. அதேபோன்று மக்கள் தங்களுக்கே பெரும்பான்மையாக வாக்களிப்பார்கள் என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அறிந்திருந்தார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மாகாண சபைக்கான 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கின்றது. இது மொத்தத்தில் மூன்றிலிரண்டு பங்குக்கும் அதிகமான வெற்றியாகும். அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 இடங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பெற்றிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் 2 பேர் மட்டுமே தெரிவாகியிருக்கின்றார்கள். வவுனியாவில் தர்மபால செனவிரத்னவும், யாழ்ப்பாணத்தில் அங்கஜனும் மாத்திரமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவாகியிருக்கின்றார்கள்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். மன்னாரில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரிஸ்கான் பதியுதீன், வவுனியாவில் இந்தக் கட்சியினால் நிறுத்தப்பட்டிருந்த ஏ.ஜயதிலக்க முல்லைத்தீவில் அகமட் லெப்பை காசிம் ஆகியோர் தெரிவாகியிருக்கின்றார்கள்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ள தவநாதன், கமலேந்திரன், ஆகியோர் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு அரசாங்கம் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இந்த மாவட்டங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக அதற்கென விசேடமாக அமைப்பாளர்களை நியமித்து செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் வவுனியாவில் தர்மபால செனிவிரத்ன, கிளிநொச்சியில் கீதாஞ்சலி நகுலேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் அங்கஜன் ஆகியோர் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றார்கள். இருந்த போதிலும் தனித்தும், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும் இயங்கிய போதிலும் அரசாங்கம் வடக்கில் பெரும் தோல்வியையே சந்தித்திருக்கின்றது.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் முதலாக நாட்டில் நடத்தப்பட்ட தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அவரைப் பொறுத்தமட்டில், எடுத்த காரியங்கள் எல்லாமே வெற்றியாகவே முடிந்திருக்கின்றன. வடமாகாண சபைக்கான தேர்தலுடன் நடத்தப்பட்ட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் முதல் தடவையாக வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், வடக்கில் ஈபிடிபி கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தீவுப் பகுதியில் அதிக செல்வாக்கு பெற்றிருந்ததாகக் கருப்பட்டு வந்த அந்தக் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்டு வந்த நெடுந்தீவில் 50 வீதத்திற்கும் அதிகமான மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கே இம்முறை வாக்களித்திருக்கின்றார்கள். இது ஈபிடிபி கட்சிக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான அரசியல் வீழ்ச்சியாகவே கருதப்படுகின்றது.
அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்களித்த மக்கள்
இந்தத் தேர்தலின் மூலம் வடமாகாண மக்கள் தங்களுக்கு ஓர் அரசியல் தீர்வு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அத்துடன் இராணுவத்தினர் இ;ங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தமது வாக்களிப்பின் மூலம் அழுத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே வடமாகாண மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருந்தார்கள்.
வெற்றிலைக்கே வாக்களிக்க வேண்டும் என்று இராணுவத்தினர் சீருடையில் வீடுவீடாகச் சென்று மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்திருக்கின்றார்கள். தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இராணுவ புலனாய்வாளர்களினால் கூர்ந்து கவனிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் மனங்களில் அச்சம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கும் அப்பால், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஏனைய முக்கிய கிராம மட்டத்திலான அதிகாரிகளும் அரசாங்கத் தரப்புக்கான தேர்தல் பரப்புரை நடவபடிக்கைகளில் பகிரங்கமாகவே ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகப் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசாரத்திற்கான காலம் முடிந்த பின்னரும் பகிரங்கமாக கிராமப்புறங்களில் அரசாங்கத் தரப்பினர் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்ருந்ததாகவும் கண்காணிப்பு குழுக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தது. தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப் போவதாகக் கூறி, அரச தரப்பினரால், மின்கம்பங்கள் கொண்டு சென்று இறக்கப்பட்டன. குடிசைகளில் வாழ்கின்ற மக்களுக்கு சீமெந்து பேக்குகளும், கூரைத்தகடுகளும் கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டன.
வெலிஓயா பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கென புதிதாக அமைக்கப்பட்டிருந்த 500 வீடுகள் பகிரங்க விழா ஒன்றின் மூலம் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டன. இதுவும் தேர்தல் பிரசார காலத்தில் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறான வகையில் நடைபெற்றது.
தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் இருக்கையில் நள்ளிரவு நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல், முதல் நாளிரவு கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தங்கியிருந்த போது அவருடைய அலுவலகம் ஆயுதமேந்திய குழுவொன்றினால் சுற்றி வளைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை, வாக்களிப்பு நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் வாக்காளர்கள் அரச சின்னமாகிய வெற்றி;லைக்கே வாக்களிக்க வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டமை போன்ற அடக்குமுறை சூழலுக்கு மத்தியிலேயே மக்கள் வாக்களித்தார்கள். இருந்தும், அவர்கள் தமது நிலைப்பாட்டைத் துணிவோடு வாக்குச் சீட்டுக்களின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்கள்.
இருபக்க சவால்கள்
அபிவிருத்தியென்பது முக்கியமல்ல. அரசியல் தீர்வே முக்கியம். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மக்கள் தமது பல்வேறு அபிலாசைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றை மக்கள் ஏற்றுக்கொண்டு அதற்காக வாக்களித்திருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
மாகாணசபையை அதிகாரமில்லாத ஒரு வெற்றுச் சபையாக இயங்கச் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படடுள்ள அதிகாரங்களில் முக்கியமானவற்றை நீக்கிவிட்டு, பெயரளவில் மாகாண சபையை இருக்கச் செய்து அனைத்துப் பணிகளையும் மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் தீர்மானம்.
ஆனால் அர்த்தமுள்ள சபையாக மாகாண சபையை நிர்வகிக்க வேண்டும். அதற்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அதற்கும் மேலாகச் சென்று அர்த்தமுள்ள ஓர் அதிகாரப் பரவலாக்கலை அடைய வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிந்தரமான ஓர் அரசியல் தீர்வைப் பெறுவதற்கான முதற்படியாக இந்த மாகாணசபை நிர்வாகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அபிலாசையாக இருக்கின்றது.
துணிவாக, தெளிவான முடிவோடு, பெருமளவில் அணிதிரண்டு அளித்துள்ள வெற்றியை அர்த்தமுள்ளதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த மாகாண சபையின் ஊடாகச் செயற்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த ஆவலும் எதிர்பார்ப்புமாக இருக்கின்றது.
யுத்தச் சூழல் காரணமாகப் பிரிந்து கிடந்த நாட்டை பூகோள ரீதியாக ஐக்கியப் படுத்தியுள்ளபோதிலும், அரசாங்கம் போரினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்தவில்லை. யுத்தத்தினால் அழிந்துள்ள பிரதேசத்தைக் கட்டியெழுப்பியுள்ள அரசாங்கம் அந்த நடவடிக்கையை யுத்த பிரதேசத்து மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகையாக அபிவிருத்தியாக உருவகப்படுத்தி பெருமை பேசிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. யுத்த அழிவுகளைச் சீர் செய்ய வேண்டியதும், மறுசீரமைப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும். மறுசீரமைப்புப் பணிகளை அபிவிருத்தி எனக் கூறி மக்களிடமிருந்து கைம்மாறு எதிர்பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் இந்தத் தேர்தலில் மக்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். நல்லிணக்கத்திற்கு வழிகோலுங்கள். எங்களையும் இந்த நாட்டின் சமவுரிமையுள்ள மக்களாக ஏற்று ஆட்சி செய்யுங்கள் என்ற கோரிக்கையையும் மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களின் மூலம் முன்வைத்த்pருக்கின்றார்கள்.
தங்களது அபிலாசைகளை நிறைவேற்றத்தக்க வகையில் அரசாங்கமும், வடமாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
வடமாகாண சபையின் நிர்வாகத்தைப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நன்மையடையும்ட வகையில் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்திருக்கின்றது.
ஆனால், வடமாகாண சபையில் பெற்றுள்ள அறுதிப் பெரும்பான்மையை பயன்படுத்தி நாட்டைத் துண்டாடுவதற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கப் போகின்றது என்ற தவறான பிரசாரத்தை அராசங்கம் முன்னெடுத்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், சிங்களத் தீவிரவாத சக்திகளைத் தூண்டிவிட்டு, அவற்றின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வடக்கும் தெற்கும் எந்தக் கோட்டில் இணைந்து செயற்படப் போகின்றன என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கின்றது.
இராணுவமயம் நீங்க வேண்டும் என்பதில் முரண்பாடு
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். முடியுமானால் முழுமையாக இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாகும். ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாரில்லை. அது மட்டுமல்லாமல், இதற்கு இராணுவமும் உடன்படவில்லை.
யுத்தத்திற்காகப் பெருப்பிக்கப்பட்ட இராணுவத்தை, யுத்தம் முடிந்துவிட்டது என்பதற்காக வெறும் கையோடு வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகின்றது. வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வெற்றிகொள்வதற்காகப் பாடுபட்ட இராணுவத்தைக் கௌரவமாக வைத்திருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் மாற்றமுடியாத நிலைப்பாடாக இருக்கின்றது. இயலுமான வரையில் எந்தப் பிரதேசத்தில் நிலைகொண்டு யுத்தத்தை நடத்தினார்களோ, அந்தப் பகுதிகளிலேயே அவர்களை நிரந்தரமாகக் குடியேற்ற வேண்டும் என்ற நப்பாசையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இதனால், யுத்த பிரதேசத்தின் மீள்கட்டமைப்பு, அபிவிருத்திப் பணிகளிலும் நிர்வாகப் பணிகளிலும் இராணுவத்தை இரண்டறக் கலந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. இந்த நிலையில் வடபகுதியின் அரசியல், பொருளாதார, சமூக, சமய விவகாரங்கள் அனைத்திலுமே இராணுவத்தின் பங்களிப்பு நிரந்தரமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே, வடமாகாணத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் இராணுவத்தின் பங்களிப்பு இல்லாமல் இடம்பெற முடியாத அளவிற்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இத்தகைய இராணுவமயப்படுத்தலை இல்லாமல் செய்ய முடியுமா என்ற கேள்வி இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. ஜனநாயக முறையில் ஒரு தேர்தலின் மூலம், இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையைச் செயற்படுத்த வேண்டிய கட்டாய நிலலமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. வடபகுதி மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், சர்வதேச ரீதியில் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பது அரசாங்கத் தரப்பினருக்கு இருக்கின்ற கஷ்டமான நிலையாகும்.
எனவே, வடபகுதியின் தேர்தல் முடிவானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மட்டுமல்லாமல் அரசாங்கத்தையும் சவால்களுக்கு முகம் கொடுக்கச் செய்திருக்கின்றது.
தோல்வியையே கண்டறியாத அரசாங்கத்திற்குச் சவால் விடும் வகையில் வடபகுதியின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. இந்த முடிவானது, அதிகரித்த வாழ்க்கைச் செலவு சுமையினாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி மக்களையும் விழிப்படையச் செய்யுமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் அவதானிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
போர் வெற்றியை முதலீடாகக் கொண்டு அரசாங்கம் நடத்தி வருகின்ற அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத்தக்க வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதற்கான வாய்ப்பும் இருப்பதாகவே அவதானிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது.
மொத்தத்தில் வடமாகாண சபைக்கான தேர்தலின்போது அடித்துள்ள மக்களின் அரசியல் உரிமையை இலக்காகக் கொண்ட சுனாமி அலையானது, அரசாங்கத்தின் தமிழ் அரசியல் விரோதப் போக்குகளைத் தகர்த்து, நாட்டில் உண்மையான ஜனநாயகச் செயற்பாட்டு சமபலத்தை உருவாக்குவதற்கு வழிசமைக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இராணுவச் சூழலை இல்லாமல் செய்து உண்மையான ஒரு சிவில் நிர்வாகச் சூழலை வடக்கில் உருவாக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், புதிய மாகாண சபையும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. இந்த சவால்களை அவர்கள் எந்த அளவில் எதிர்கொண்டு வெற்றிகரமாகச்செயற்படப் போகின்றார்கள் என்பதிலேயே வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றியின் பலாபலன்கள் தங்கியிருக்கின்றன.
செலவரட்ணம் சிறிதரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக