புதன், 25 செப்டம்பர், 2013

கோமா நிலையிலிருந்த தாய்க்கு உணவை மென்று தனது வாய்மூலம் ஊட்டிய பாலகன் (படங்கள் இணைப்பு)

அதிசயிக்கத்தக்க வகையில் விழித்தெழுந்த தாய்

கார் விபத்தில் கோமா மயக்க நிலைக்கு சென்ற பெண்­ணொ­ருவர், தனது 2 வயது மகன் வாயால் மென்ற உணவை அவ­ருக்கு தனது வாய்­மூ­ல­மாக ஊட்ட முயற்­சித்­த­வேளை அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் விழித்­தெ­ழுந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜியாங்ஸு மாகா­ணத்­தி­லுள்ள ஷுயாங் நக­ரைச் ­சேர்ந்த ஸாங் ரோங்­ஸியாங் என்ற மேற்­படி பெண், மூன்று வரு­டங்­க­ளுக்கு முன் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­ வேளை விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு சென்றார்.

இந்­நி­லையில் கோமா மயக்க நிலை­யி­லி­ருந்து மீளாத நிலை­யி­லேயே அவர் 2011 ஆம் ஆண்டு ஆண் குழந்­தையை பிர­ச­வித்தார்.

பிறந்த அந்தக் குழந்­தைக்கு கவோ கியன்போ என பெயர் சூட்­டப்­பட்­டது

இதன்போது ரோங்­ஸியாங் ஒரு போதும் சுய நினை­வுக்கு திரும்­ப­மாட்டார் என மருத்­து­வர்­களால் கூறப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து கவோ கியன்போ தனது தாயின் படுக்­கை­ய­ருகே பொழுதைக் கழித்து வந்தான்.

அவருக்கு உணவை விழுங்க முடிந்­தாலும் அதனை மெல்ல முடி­யா­ததால் பால­க­னான கவோ கியன்­போவின் உத­வி­யுடன் அவனால் மெல்­லப்­பட்ட உணவை அவ­ருக்கு ஊட்ட ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் சம்­பவ தினம் கவோ கியன்போ தனது வாயால் மென்ற உணவை வாய்­மூ­ல­மா­கவே தனது தாய்க்கு ஊட்ட முயற்­சித்­த­வேளை ரோங்­ஸியாங் திடீ­ரென விழித்து எழுந்துள்ளார். தனது சின்­னஞ்­சிறு மகனின் அன்பே தன்னை கோமா நிலையிலிருந்து மீளச் செய்து தனக்கு புதுவாழ்வைத் தந்துள்ளதாக ரோங்ஸியாங் தெரிவித்தார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல